தீர்க்கமுடியாத பிரச்சினைகள் என்று சொன்னால், அதில் பல வகையான பிரச்சனைகள் அடங்கும். கடன் பிரச்சனை, வருமானத்தில் பிரச்சனை, உடல்நல கோளாறு, திருமணம் தள்ளிப் போவது, கல்வியில் தடை, சொந்தத் தொழிலில் பிரச்சனை, அலுவலகத்தில் பிரச்சனை, இப்படி பிரச்சினைகளை அடுக்கிக்கொண்டே போகலாம். அந்த காலங்களில் எல்லாம் நம்முடைய முன்னோர்கள் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு மூலிகைகளையும், தாவரங்களையும் தான் பயன்படுத்தி வந்தார்கள். அப்படி நம் முன்னோர்களால் சொல்லப்பட்ட ஒரு குறிப்பை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த பதிவை பற்றிய முழு விவரமும், வீடியோ பதிவும் அதில் அடங்கி உள்ள குறிப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நம்முடைய பிரச்சனைகள் தீர்வதற்காக நாம் பயன்படுத்தப்போகும் அந்த செடியின் பெயர் ‘நாராயண சுள்ளி’ செடி. இந்தச் செடி பல பேருக்கு தெரிந்திருக்கும். பலபேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. நாராயணரின் அம்சத்தை பெற்றிருக்கும் செடிதான் இந்த நாராயண சுள்ளி செடி. இந்த செடியின் இலையை வைத்துதான், முறையான பரிகாரத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். முதலில் சூரிய உதயமாகும் காலைவேளையில் 6 மணிக்கு இந்த செடியின் முன்பாக நீங்கள் அமர்ந்து, மனதார உங்களது வேண்டுதலை சொல்லி, அந்த செடியிலிருந்து ஒரு இலையைப் பறித்துக் கொள்ள வேண்டும். அதன் பின்பு உங்களது பூஜை அறையில் ஒரு தீபம் ஏற்றிவைத்து, ஒரு தாம்பூலத் தட்டில் இந்த இலையை மஞ்சள் தண்ணீரால் கழுவி வைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்ததாக, ஒரு பேனாவை எடுத்து அந்த இலையில் உங்களது ஏதாவது ஒரு வேண்டுகோளை, அதாவது நிறைவேறக் கூடிய ஒரு குறிக்கோளை மட்டும் மனதில் வைத்துக் கொண்டு, அந்த குறிக்கோளை அந்த இலையில் ஒரு முறை எழுதுங்கள். (சோதித்துப் பார்க்க வேண்டும் என்பதற்காக ஒரு கோடி ரூபாய் வேண்டும் என்றெல்லாம் விதாண்டா வாதமாக எழுதக்கூடாது. குறிக்கோள் உண்மையாக இருக்கவேண்டும்).

கடன் தீர வேண்டும் என்றால் ‘கடன் பிரச்சனை தீர வேண்டும்’ என்று எழுதிக் கொள்ளலாம். உங்களுடைய வீட்டில் பணம் பிரச்சனையாக இருக்கிறது என்றால், ‘வீட்டிலிருக்கும் பணப்பிரச்சனை தீர வேண்டும்’ என்று எழுதிக் கொள்ள வேண்டும். இவ்வாறு உங்களுடைய பிரச்சனையை ஒரு வரியில் அந்த இலையில் எழுதி அந்த தாம்புல தட்டில் வைத்து விடுங்கள். அதன்பின்பு விநாயகரின் மந்திரத்தை 11 முறை அந்த தீபத்தை பார்த்து உச்சரிக்க வேண்டும். அடுத்ததாக உங்களது குலதெய்வத்தின் மந்திரத்தை 11 முறை உச்சரியுங்கள். விநாயகர் மந்திரம் என்றால், ‘ஓம் விக்னங்களை தீர்க்கும் விநாயகா போற்றி’. உங்களது குலதெய்வம் முருகப் பெருமானாக இருந்தால் ‘ஓம் முருகப் பெருமானே போற்றி!’ என்று உச்சரித்தால் மட்டும் போதும்.

By admin