சுத்தம் சோறிடும், சுத்தம் சுகம் தரும் என்பார்கள். இது உடல் சுத்தத்தை மட்டும் சொல்லவில்லை. நம்மை சுற்றிருக்கும் இடத்தையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்பதன் அவசியத்தை வலியுறுத்துகிறது . குறிப்பாக பாத்ரூம் போன்றவற்றை சுத்தமாக வைத்திருப்பது நல்லது. ஏனெனில் கோடிக்கணக்காண கிருமிகள் இங்கு தான் வாழும். இந்த பதிவை பற்றிய முழு விவரமும், வீடியோ பதிவும் அதில் அடங்கி உள்ள குறிப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

எனவே நீங்கள் பாத்ரூமை சரி வர சுத்தம் செய்யா விட்டால் அதனால் நோய்கள் பரவவும் வாய்ப்புள்ளது. நம் வீட்டில் பயன்படுத்தும் பாத்ரூம்களை நீங்கள் என்ன தான் தேய்த்து தேய்த்து சுத்தம் செய்தாலும் ஒரு ஸ்டார் ஹோட்டல் பாத்ரூம் பளபளப்பு கிடைப்பதில்லை. இந்த சுத்தப் பராமரிப்பு ரகசியத்தை பற்றி நமது எக்ஸ்பட்ஸ் என்ன என்ன டிப்ஸ்களை உங்களுக்கு கூறியுள்ளார் என்பதை இக்கட்டுரையில் காணலாம். நீங்கள் பல் துலக்கும் பற்பசை அழுக்கு, தலை சீவும் போது உதிரும் தலை முடி மற்றும் உணவுத் துகள்கள் எல்லாம் ஒன்றாக சேர்ந்து உங்கள் வாஷ் பேசன் சத்தத்தையும் அழகையுமே கெடுத்து விடும்.

இதற்கு லிக்யூட் க்ளீன்சர் அல்லது பினால் கொஞ்சத்தை அதில் ஊற்றி சில நிமிடங்கள் அப்படியே விட்டு விடவும். பிறகு நன்றாக பிரஷ்யை கொண்டு தேய்த்து கழுவ வேண்டும். இதை திரும்ப திரும்ப செய்து வரும் போது உங்கள் வாஷ் பேசன் பளபளக்கும். எக்ஸ்பட் டிப்ஸ் :தேங்காய் நாரை கூட நீங்கள் இயற்கை ஸ்க்ரப் மாதிரி கொண்டு வாஷ் பேசனை கழுவலாம். இதைக் கொண்டு மூலை முடுக்குகளிலுள்ள அழுக்குகளை கூட எளிதாக நீக்கலாம்.

இதை சுத்தம் செய்வது என்பது மிகவும் கடினமான விஷயம். காரணம் எல்லா அழுக்குகளும் இங்கே தேங்கிப் போய் கிடக்கும். உங்கள் பாத்ரூம் டைல்ஸ்களை சுத்தம் செய்வது என்பது சாதாரண விஷயம் கிடையாது. படாதபாடு மட்டும் தேய்த்து தேய்த்து கை வலிக்க கழுவினால் கூட அழுக்கு என்னமோ போகாது. உடனே நீங்கள் என்ன செய்வீர்கள். அதிக கெமிக்கல் நிறைந்த ஒரு பொருளை பயன்படுத்த முற்படுவீர்கள். ஆனால் இந்த கஷ்டமே இனித் தேவையில்லை. நீங்கள் வீட்டிலேயே எளிதாக ஒரு க்ளீன்சர் தயாரிக்கலாம்.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin