பழங்கள் அதிகம் சாப்பிடும் பழக்கத்தை கொண்ட மக்கள் நோய்களால் பாதிக்கப்படுவதில்லை. நாம் உண்பதற்கு உகந்த பழங்கள் எல்லாமே உடலுக்கு நன்மை செய்யக்கூடியதாகும். உடலுக்கு ஊட்டத்தை அளிக்கும் உணவாகவும், உடலின் பல குறைபாடுகளை நீக்கவும் உதவும் ஒரு அருமையான பழம் தான் பேரிச்சம் பழம். இந்த பேரிச்சம் பழத்தை உண்பதால் ஏற்படும் நன்மைகளை இங்கு தெரிந்து கொள்ளலாம். இந்த பதிவை பற்றிய முழு விவரமும், வீடியோ பதிவும் அதில் அடங்கி உள்ள குறிப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பேரிச்சம் பழத்தில் பொட்டாசியம் கால்சியம் பாஸ்பரஸ் போன்ற மூல பொருட்கள் அதிகம் இருக்கின்றன. இது மனிதர்களின் உடலின் எலும்புகளின் தேய்மானத்தை குறைக்கிறது. மேலும் எலும்புகளுக்கு உறுதித்தன்மையையும் அளிக்கிறது. தினமும் பேரிச்சம் பழம் சாப்பிட்டு வருபவர்களுக்கு எலும்புகள் வலுவிழப்பது, மூட்டு தேய்மானம் போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் பாதுகாக்கிறது.

ஒவ்வொருவருக்கும் கண்பார்வை தெளிவாக இருப்பது அவசியமாகும். உணவில் ஏற்பட்டு ஊட்டச்சத்து குறைபாடுகளால் சிலருக்கு கண்பார்வை மங்குதல், மாலைக்கண் நோய் போன்ற குறைபாடுகள் ஏற்படுகின்றன. தினந்தோறும் பேரிச்சம் பழம் சாப்பிடுபவவர்களுக்கு கண்களின் பார்வை திறன் மேம்படும். கண்புரை போன்ற பிரச்சனை ஏற்படுவதையும் தடுக்கும்.

பேரிச்சம் பழம் இரும்புச்சத்து அதிகம் நிறைந்தது. நோயாளிகள், குழந்தைகள், வயதானவர்கள் தினந்தோறும் சில பேரிச்சம் பழங்களை சாப்பிட்டு வருவதால் அவர்களின் உடல் பலம் பெறும். கருவுற்றிருக்கும் பெண்களும் பேரிச்சம் பழங்களை அதிகம் சாப்பிட்டு வருவது, அப்பெண்களுக்கும், அவர்களின் வயிற்றில் வளரும் குழந்தைகளுக்கும் மிகவும் நல்லது. நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்ட ஆண்களுக்கு தாம்பத்திய உறவில் ஆர்வம் இல்லாதது, மலட்டு தன்மை போன்ற பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். தினமும் காலை மற்றும் இரவு வேளைகளில் சில பேரிச்சம் பழங்களை நன்கு மென்று சாப்பிட்டு, சூடான பசும்பால் அருந்தினால் நரம்புகள் வலுப்பெற்று , ஆண்மை குறைபாடுகள் நீங்கும்.

மிகவும் மெலிந்த தேகம் கொண்டவர்கள், இயல்பான எடைக்கு குறைவான உடல் எடை கொண்டவர்கள் தினந்தோறும் பேரிச்சம் பழங்களை நன்கு அரைத்து, அதை சூடான பாலில் தினமும் மூன்று வேளை அருந்தி வந்தால் உடல் எடை பெருகும். நீண்ட நேரம் செயலாற்றும் சக்தியையும் உடலுக்கு கொடுக்கும்.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin