பல் முளைக்காத குழந்தைகள் முதல் பல் இல்லாத பாட்டி வரை அனைவருக்கும் சாப்பிடக் கொடுக்கக் கூடிய ஒன்று தான் இந்த இட்லி. உடம்பு சரி இல்லாதவர்கள் கூட சாப்பிடுவதற்கு அத்தியாவசியமான ஒரு உணவு என்றால் அது இட்லி மட்டும் தான். ஆனால் இந்த இட்லியை அனைவரும் வேண்டாம் என்று ஒதுக்கிவிட்டு தோசையைதான் விருப்பமாக சாப்பிடுகிறார்கள். இந்த பதிவை பற்றிய முழு விவரமும், வீடியோ பதிவும் அதில் அடங்கி உள்ள குறிப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இட்லி என்றால் போர் அடிக்கிறது என்று சொல்லும் குழந்தைகளுக்கு இட்லியை அவர்கள் விரும்பும் வகையில் விதவிதமாக செய்து கொடுத்தால் போதும், மிகவும் ரசித்து சாப்பிடுவார்கள். அவ்வாறு இட்லி மல்லிகை பூ போல மிருதுவாக இருப்பதற்கு அதில் சேர்க்கப்படும் அரிசி மற்றும் உளுந்தின் அளவுகள் தான் காரணம். எனவே இட்லி சாப்டாக வருவதற்கு சரியான பக்குவத்தில் அரிசி மற்றும் உளுந்தை சேர்க்க வேண்டும். இப்பொழுது குழந்தைகள் விருந்து சாப்பிடும் வகையில் இரண்டு விதமான இட்லிகளை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

முதலில் அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு கடாயை வைக்க வேண்டும். கடாய் நன்றாக சூடானதும், அதில் ஒரு ஸ்பூன் நெய் சேர்க்க வேண்டும். பின்னர் இதனுடன் அரை கப் ரவை மற்றும் கால் கப் சேமியாவை சேர்த்து, நன்றாக வறுக்க வேண்டும். பிறகு இவற்றை ஒரு கிண்ணத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதே கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்க்க வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் அதில் கடலைப்பருப்பு சேர்த்து வறுக்க வேண்டும். அதன் பின்னர் இரண்டு பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி சேர்க்க வேண்டும். பிறகு தேங்காய் துருவலையும் சேர்த்து நன்றாக வதக்கி விட்டு, இறுதியாக கொத்தமல்லி தழை சேர்த்து வதக்க வேண்டும். அதன் பிறகு அடுப்பை அனைத்து விட வேண்டும்.

பின்னர் தாளித்த இவை அனைத்தையும் ரவை மற்றும் சேமியாவை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பிறகு இவற்றுடன் கால் கப் தயிர் சேர்த்து கலந்துவிட்டு, இவற்றுக்குத் தேவையான உப்பையும் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பிறகு இவற்றுடன் போதுமான அளவு தண்ணீர் சேர்த்து கரைத்து வைத்து, 20 நிமிடத்திற்கு அப்படியே விட்டு விட வேண்டும். பின்னர் ஒரு இட்லி பாத்திரத்தில் தண்ணீர் வைத்து, அடுப்பின் மீது வைத்து விட வேண்டும். அதன்பிறகு ஒவ்வொரு இட்லி தட்டிலும் லேசாக எண்ணெய் தடவிக் கொள்ள வேண்டும். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக மாவு எடுத்து இட்லி தட்டுகளில் ஊற்றி கொள்ள வேண்டும். பின்னர் இட்லி தட்டை இட்லி பாத்திரத்தில் வைத்து 10 லிருந்து 15 நிமிடம் வேக வைத்து எடுத்தால் சுவையான ரவை சேமியா இட்லி தயாராகிவிடும்.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin