நாமும் என்னென்னவோ மருந்துகள், எலிப் பொறி வாங்கி வைத்து இருப்போம். ஆனால் இந்த எலி மட்டும் நம்மளுக்கே டகால்டி கொடுத்து ஓடி விடும். எலி பார்ப்பதற்கு சிறியதாக இருந்தால் கூட ரெம்ப புத்திசாலித்தனம் வாய்ந்தது. நீங்க மான்ஸ்டர் படம் பார்த்திருந்தா கூட தெரியும். உங்க உணவுப் பொருட்களை சாப்பிடுவது, பேக்ஸ் , எலக்ட்ரானிக்ஸ் கேபில்கள் இப்படி எந்த ஒரு பொருளையும் விடாமல் கடித்து விடும். அதுமட்டுமல்லாமல் இதை அப்படியே அசால்ட்டா விட்டு வீட்டீங்கள் என்றால் குட்டிகள் போட்டு வேகமாக பெருக ஆரம்பித்து விடும். மேலும் எலிகளால் மனிதருக்கு நிறைய நோய்கள் பரவுகின்றன என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இதனால் மனிதருக்கு உயிரிழப்பு, காய்ச்சல், வாந்தி, குமட்டல் போன்ற தீவிர பாதிப்பிற்கு உள்ளாகின்றன. இந்த பதிவை பற்றிய முழு விவரமும், வீடியோ பதிவும் அதில் அடங்கி உள்ள குறிப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

குழந்தைகள் இருக்கும் வீட்டில் ரெம்ப ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அவர்களின் விளையாட்டு பொருட்கள் இவற்றில் எலிகள் வாய் வைக்கும் போது அவற்றின் மூலம் பரவும் பாக்டீரியாக்கள் இருக்க கூடும். மேலும் எலிக் கடித்தல் நிறைய பேருக்கு விஷமாக மாறுகிறது. எனவே உடனே எலிகளை வீட்டில் இருந்து அப்புறப்படுத்துதல் முக்கியம். ஆனால் குழந்தைகள் இருக்கும் வீடு என்றால் பாய்சன் வகை மருந்துகளை வைக்க யோசிப்போம். எலிப்பொறி என்றால் அவ்வளவு சீக்கிரம் எலிகளும் மாட்டுவதில்லை. எனவே இதற்கு இயற்கையான வழியை தேர்ந்தெடுப்பதே சிறந்தது. சில இயற்கையான பொருட்களை பார்த்தால் எலிக்கு அழற்சியாம். எனவே அந்த பொருட்களை வைத்து எலிகளை எளிதாக விரட்டி விடலாம்.

வீட்டில் ஆங்காங்கே உணவுப் பொருட்களை போடுவது எலிகளை சுண்டி இழுக்கும். அதுக்கு உணவு கிடைப்பது எளிதாகிறது. மழைக்காலத்தில் கழிவு நீர் தேங்கி இருப்பது, சாக்கடை கழிவுகள் குழாய்கள் வழியாக வீட்டிற்குள் எளிதாக நுழைந்து விடுகின்றன.

எலிகளுக்கு புதினா போன்ற நறுமண வாசனை பிடிக்காது. எனவே எலி வரும் இடத்தில் ஒரு சிறிய பஞ்சில் புதினா எண்ணெய்யை நனைத்து அங்கே வையுங்கள். குறிப்பாக வீட்டின் மூலை முடுக்குகளில் வையுங்கள். இதை ஓரிரு நாட்களுக்கு தொடர்ந்து செய்து வாருங்கள். இந்த வாசனை பிடிக்காமல் எலியும் ஓடிப் போய் விடும். உங்க வீடும் நறுமணத்துடன் இருக்கும்.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin