எலுமிச்சை பழத்தோல் தேவையில்லை என்று நீங்கள் தூக்கி போடுபவராக இருந்தால்! உங்களுக்கு தான் கண்டிப்பாக இந்த பதிவு உபயோகமாக இருக்கும். நாம் அடிக்கடி பயன்படுத்தும் எலுமிச்சை பழத்தை சாறு எடுத்ததும் வீணாக தூக்கி எறியும் அதன் தோல்களை தனியே ஒரு பாலித்தீன் பையில் போட்டு பிரிட்ஜில் ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ளலாம். இப்படி ஸ்டோர் செய்து வைத்த இந்த எலுமிச்சை தோல்களை வைத்து அற்புதமான வீட்டு உபயோக டிப்ஸ்களை தான் இனி இதில் தெரிந்து கொள்ள இருக்கிறோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம். இந்த பதிவை பற்றிய முழு விவரமும், வீடியோ பதிவும் அதில் அடங்கி உள்ள குறிப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

எலுமிச்சை பழச்சாற்றை அப்படியே பிரிட்ஜில் ஸ்டோர் செய்து வைக்காமல், ஐஸ் ட்ரேயில் ஊற்றி வைத்து, கியூப்களாக செய்து வைத்தால் தேவைப்படும் பொழுது பயன்படுத்திக் கொள்ளலாம். எலுமிச்சைப் பழத் தோல்களை ஒவ்வொரு வீட்டு உபயோகத்திற்கும் எடுத்து சட்டென பயன்படுத்திக் கொள்ள முடியும். நம் தோசைக்கல்லில் அடிக்கடி ஏற்படும் பிரச்சனை தோசை மொறு மொறுவென்று வராமல் ஒட்டிக் கொள்வது தான். இதற்கு நீங்கள் இரண்டு வகையான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

ஒன்று தோசைக்கல்லில் இருக்கும் எண்ணெய் பிசுக்குகளை அகற்ற எலுமிச்சை பழ தோலை வைத்து உப்பில் தொட்டுக் கொண்டு நன்கு தேய்க்க வேண்டும். பின்னர் வெறும் தண்ணீரில் கழுவி விட்டு அடுப்பில் வைக்க வேண்டும். அதன் பின் சிறிதளவு தண்ணீரில் சமையல் எண்ணெய்யை சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த எண்ணெயை பயன்படுத்தி தோசை கல்லை ஒவ்வொரு முறை தேய்த்து தோசை ஊற்றினால் தோசை கொஞ்சம் கூட ஒட்டாமல் மொறுமொறுவென்று கண்டிப்பாக வரும்.

பித்தளை பாத்திரங்களை தேய்க்க சிறிதளவு பேக்கிங் சோடா மற்றும் சபீனா சேர்த்து தண்ணீர் பயன்படுத்தாமல் எலுமிச்சைப் பழ தோலை வைத்து நன்கு தேய்த்து விட்டால் போதும்! புத்தம் புதியதாக மின்னும். பிரிட்ஜ் வாசனையாக இருக்கவும், அதில் இருக்கும் துர்நாற்றத்தை போக்கவும் ஒரு சிறிய கிண்ணத்தில் எலுமிச்சை மூடியை வைத்து அதில் சிறிதளவு ஆப்ப சோடா போட்டு விட்டால் போதும்! ஒவ்வொருமுறை பிரிட்ஜை திறக்கும் பொழுதும் பிரஷ்ஷாக இருக்கும்.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin