இந்திய உணவு வகைகளுக்கு ஏலக்காய் மணம், சுவையை அளிப்பதோடு மட்டுமல்லாது, பல்வேறு மருத்துவ பயன்களை தன்னகத்தே கொண்டு உள்ளது. பழங்காலம் தொட்டு இது இந்திய சமையலில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆயுர்வேத மருத்துவத்தில் ஏலக்காய் முக்கிய பங்கு வகிக்கிறது. வாயில் ஏற்படும் தொற்றுக்கள், தொண்டையில் ஏற்படும் பாதிப்புகள், மார்பு பகுதியில் ஏற்படும் சுணக்கங்கள், வாயு சம்பந்தமான கோளாறுகள், விஷக்கடி உள்ளிட்டவைகளுக்கு ஏலக்காய் சிறந்த தீர்வு அளிப்பதாக நம்பப்படுகிறது. இந்த பதிவை பற்றிய முழு விவரமும், வீடியோ பதிவும் அதில் அடங்கி உள்ள குறிப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மருத்துவ பயன்களுக்காக, ஏலக்காய், இந்தியாவில் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. பச்சை ஏலக்காயில் மருத்துவ குணங்கள் நிரம்பி உள்ளன. இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, கால்சியம், சோடியம், பொட்டாசியம், இரும்புச்சத்து, காப்பர், மாங்கனீஸ் உள்ளிட்ட சத்துக்கள் உள்ளன. ஏலக்காயின் மருத்துவ குணங்கள் குறித்து விரிவாக காண்போம். ஏலக்காயை தினமும் உணவில் சேர்த்து வந்தால், உயர் ரத்த அழுத்த பாதிப்பில் இருந்து நம்மை காத்துக் கொள்ளலாம். இது ரத்தத்தை சுத்தப்படுத்துகிறது. சிறுநீரை பெருக்கி உடலில் உள்ள கழிவுகளை அகற்றுகிறது.

ஏலக்காய், செரிமானத்திற்கு பேருதவி புரிவதால், இந்தியர்களின் ஒவ்வொரு சமையலிலும் அது நிச்சயம் இடம்பிடிக்கிறது. வயிற்றில் ஏற்படும் அல்சர், ,ஆசிட் ரீபிளக்‌ஸ் மற்றும் வாயு சம்பந்தமான கோளாறுகளுக்கு தீர்வு அளிக்கிறது. ஏலக்காயில் அதிகளவு ஆன்டி ஆக்சிடண்ட்களும், பாக்டீரியாக்களை எதிர்த்து போரிடும் பண்புகளும் உள்ளன. ஏலக்காயை தொடர்ந்து உணவில் சேர்த்து வந்தால், வாய் சுகாதாரம் பேணப்படும். வாய் துர்நாற்றம் மற்றும் கெட்ட சுவாசத்தால் அவதிப்படுபவர்கள் ஏலக்காய் சாப்பிட்டு வர தீர்வு கிடைக்கும். ஏலக்காயில் உள்ள ஆன்டி ஆக்சிடண்ட்கள், உங்களை நிதானப்படுத்துகிறது. இது கார்டிசால் ஹார்மோனை சுரக்கச செய்து, மன அழுத்தத்தை குறைத்து, சுவாசித்தலை எளிதாக்குகிறது.

ஏலக்காயின் வாசனை, நமது மனதை சாந்தமடைய செய்ய உதவுகிறது. சைனஸ் நோயால் அவதிப்படுபவர்களுக்கு அருமருந்தாக ஏலக்காய் திகழ்கிறது. ஏலக்காயில் உள்ள ஆன்டி ஆக்சிடண்ட்கள், பாக்டீரியா உள்ளிட்ட நுண்ணுயிரிகளால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து காக்க உதவுகிறது.

By admin