பற்குழிகள் மற்றும் உடைந்த பற்கள் போன்றவற்றால் பற்களின் ஈறுகள் மற்றும் வேர்களுக்கிடையில் சீரற்ற நிலை ஏற்படுவதால், மிகவும் கடுமையான வலியை எதிர்கொள்வோம். இது உடைந்த பற்களின் கீழாக சீழ் கட்டி, பல் வலியை ஏற்படுத்துகிறது. சொத்தைப் பற்களில் உள்ள பாக்டீரியாக்கள் பல்கிப் பெருகி, பற்களைத் தாங்கும் எலும்புகளில் தொற்றுகளை ஏற்படுத்துகின்றன. இதனை சரியான நேரத்தில் கவனிக்காவிட்டால், உயிருக்கே உலை வைக்கவும் செய்யும். இந்த பதிவை பற்றிய முழு விவரமும், வீடியோ பதிவும் அதில் அடங்கி உள்ள குறிப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


சொத்தைப் பற்களால் ஏற்படும் வலி தாங்க முடியாததாகவும், பல்வேறு வழிமுறைகளைப் பயன்படுத்தினாலும் நிவாரணம் கிடைக்காததாகவும் இருக்கும். நீங்கள் ஈறுகளை பாதிக்கும் இந்த நோயினால் அவதிப்படுகிறீர்கள் என்றால், நீங்கள் செய்ய வேண்டிய மற்றும் செய்யக்கூடாத சில விஷயங்களைப் பற்றி நாங்கள் தெளிவுப்படுத்துகிறோம். முதலில் நீங்கள் செய்ய வேண்டியது, இந்த பிரச்சனைக்கான அறிகுறிகள் மற்றும் காரணங்களைத் தெரிந்து கொள்ள வேண்டியது தான்.

பூண்டு ஒரு பாக்டீரியா கொல்லி ஆகும். பூண்டை உரித்து எடுக்கப்படும் சாறு, தொற்றுகளில் உள்ள கிருமிகளை கொல்லும் குணம் கொண்டதாகும். மோசமான பல் வலியை நீங்கள் அனுபவித்துக் கொண்டிருந்தால், என்ன செய்ய வேண்டும் என்று இங்கே கொடுத்துள்ளோம். பூண்டை உடைத்து, அரைத்து சாறை எடுக்கவும். தொற்று உள்ள இடத்தில் இந்த சாற்றை தடவுங்கள். வீட்டிலேயே செய்யக் கூடிய இந்த நிவாரணம் பல் வலிகளை சரி செய்து விடும்.

கிராம்பு எண்ணெயும் கூட தொற்றுகளை ஏற்படுத்தும் கிருமைகளை கொன்று, பல்வலி மற்றும் ஈறு நோய்களை எதிர் கொள்ளும் மருந்தாகும். சிறிதளவு கிராம்பு எண்ணெயை எடுத்துக் கொண்டு, ஈறுகளில் மெதுவாக தேய்க்கவும். பாதிக்கப்பட்ட இடத்தில் தடவும் போது சற்றே கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகும். அளவுக்கு அதிகமான அழுத்தம் கொடுக்க வேண்டாம். அப்படி செய்தால் அதிகமான வலியை தான் உணர முடியும். சிறிதளவு கிராம்பு எண்ணெயை தடவி விட்டு, ஈறுகளை மெதுவாக மசாஜ் செய்து விடுங்கள் போதும்.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin