உப்பு இயற்கை அளித்திருக்கும் ஒரு மிகச் சிறந்த வரப்பிரசாதமாகும். மனிதன் நெருப்பை கண்டறிந்து சமைத்து உண்ணத் தொடங்கிய சில காலங்களிலேயே உணவு தயாரிப்பில் உப்பை பயன்படுத்த தொடங்கி உள்ளான். கடல் உப்பு, பாறை உப்பு போன்ற பல உப்பு வகைகள் இருக்கின்றன. என்றாலும் தற்காலத்தில் மனிதர்கள் அதிக அளவில் பயன்படுத்துவது கடலில் இருந்து பெறப்பட்டு, தொழில்நுட்ப ரீதியில் அயோடின் கலந்து உருவாக்கப்படும் உப்பு ஆகும். உப்பு உணவில் சுவையை கூட்டுவதை தாண்டி, உணவுப் பண்டங்களை கெடாமல் வைத்திருக்கவும், மனிதர்களின் நோய்களை தீர்க்கும் மருத்துவ சிகிச்சைகளில் கிருமிநாசினி போன்று செயல்படுவது போன்ற பலவிதமான அற்புத செயல்பாடுகளை கொண்ட ஒரு இயற்கை பொருளாக இருக்கிறது. அப்படியான உப்பு தினமும் உணவில் சேர்த்து உண்பதால் எத்தகைய நன்மைகளை நாம் பெற முடியும் என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம். இந்த பதிவை பற்றிய முழு விவரமும், வீடியோ பதிவும் அதில் அடங்கி உள்ள குறிப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மனிதர்களின் உடலில் இருக்கின்ற நாளமில்லா சுரப்பிகளில் தைராய்டு சுரப்பி முக்கியமானதாகும். இந்த தைராய்டு சுரப்பி சுரக்கின்ற தைராக்சின் ஹார்மோன் மனிதர்களின் உடலில் இதயத் துடிப்பு, தசைகளின் இயக்கம், செரிமானத் திறன் ஆகியவற்றின் சீரான இயக்கத்திற்கு அவசியமானதாக இருக்கிறது. இத்தகைய தைராய்டு சுரப்பி நன்றாக இயங்க நாம் சாப்பிடும் உணவில் இருக்கும் உப்பில் அயோடின் சத்து இருப்பது அவசியமாகும். எனவே அயோடின் சரியான அளவில் சேர்க்கப்பட்ட உப்பை உணவிற்கு பயன்படுத்துவதால் தைராய்டு ஹார்மோன் குறைபாடு ஏற்படாமல் தடுத்து, உடல் நலம் சீராக இருக்க உதவுகிறது.

நமது உடலில் எப்போதும் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்வது அவசியமாகும். குறிப்பாக ரத்தத்தில் இருக்கின்ற எலக்ட்ரோலைட் சத்துக்கள் உடலில் வியர்வை மற்றும் சிறுநீர் வழியே அதிகம் வெளியேறுகிறது. கால்சியம், பொட்டாசியம், சோடியம் போன்ற அத்தியாவசிய தாது உப்புகள் அந்த எலக்ட்ரோலைட் சத்துகளாக இருக்கின்றன. காலரா மற்றும் சீத பேதி ஏற்படும் சமயங்களில் உடலில் நீர்ச்சத்து இழப்பு ஏற்படுவதோடு உப்பு மற்றும் சர்க்கரையின் சத்திழப்பு உண்டாகி, உயிருக்கு ஆபத்தான நிலையை ஏற்படுத்துகின்றன. இதை ஈடுகட்ட நாம் உணவில் பயன்படுத்தும் உப்பு மற்றும் சர்க்கரை சரிவிகிதத்தில் நீரில் கலந்து பருகுவதன் மூலம் உடலின் அத்தியாவசிய உப்புச்சத்திழப்பை தடுத்து, உடல் உறுப்புகள் சீராக செயல்படுவதை உறுதி செய்ய முடியும்.

30 வயதிற்கு பிறகும் 40 வயதுகளை நெருங்கும் காலத்தில் பலருக்கு ரத்த அழுத்த பிரச்சனைகள் ஏற்படுகின்றது. ரத்த அழுத்தத்தில் உயர் ரத்த அழுத்தம், குறைந்த இரத்த அழுத்தம் என இருவகை உள்ளன. உயர்ந்த ரத்த அழுத்தம் இருப்பவர்கள் மருத்துவர்கள் அறிவுறுத்திய அளவின்படி உப்பை உணவில் சேர்ப்பதால் உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்க முடியும். அதே நேரம் குறைந்த ரத்த அழுத்தப் பிரச்சினைகள் இருப்பவர்கள், உப்பு அதிகம் சேர்க்கப்பட்ட பானங்கள், உணவுகள் அருந்துவதன் மூலம் இந்த குறைந்த ரத்த அழுத்த பிரச்சினையை தவிர்க்க முடியும்.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin