ரோட்டுக்கடையில் இட்லி, தோசை, சப்பாத்தி, பரோட்டாவுக்கு தரப்படும் சால்னாவை பலரும் விரும்பி சாப்பிடுவார்கள். சிலர் இதை குருமா என்றும் சொல்வார்கள். என்ன தான் வீட்டில் எல்லா காய்கறியும் போட்டு ஆரோக்கியமாக மணக்க மணக்க குருமா வைத்தாலும் சரி வீட்டில் இருப்பவர்கள் அதை தொட்டு தான் சாப்பிடுவார்கள். இந்த பதிவை பற்றிய முழு விவரமும், வீடியோ பதிவும் அதில் அடங்கி உள்ள குறிப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி, இவைகளுக்கு சைடிஷ் தேடுவது என்பது மிக மிக கஷ்டமான விஷயம். அதுவும் வேலையும் குறைவாக இருக்கவேண்டும். நாக்குக்கு சுவையும் தரவேண்டும். கமகம வாசம் வீச வேண்டும். லாக் டவுன் சமயத்தில் வீட்டிலேயே இருப்பவர்களுக்கு மூன்று வேளையும் சமைத்து தரும் இல்லத்தரசிகளுக்கு சுலபமான சூப்பரான ஒரு ரெசிபி இது. கட்டாயம் இன்னைக்கு ராத்திரியே ட்ரை பண்ணி பாருங்க. ரோட்டுக்கடை ஸ்டைலில் சுலபமாக ஒரு குருமா வைப்பது எப்படி. இந்த குருமாவின் வாசம் பக்கத்து வீடு வரை வீசும்.. இதுவே ஹோட்டல் சால்னா, குருமா என்றால் ஊற்றி ஊற்றி சாப்பிடுவார்கள். அப்படி என்ன தான் அந்த குருமாவில் இருக்கிறது என்றால் அதன் வாசனையும் அதன் ருசியும் தான். பெரிய பெரிய ஹோடல்களை காட்டிலும் ரோட்டுக்கடை சால்னாவை ஆண்கள், குழந்தைகள் என பலரும் விரும்பி சாப்பிடுவதை பார்க்க முடிகிறது. சில ஹோட்டல் சமையல் கலைஞர்களிடம் அதன் ரகசியம் கேட்டால் எளிதில் சொல்லிவிட மாட்டார்கள். வெங்காயம், தக்காளி, தேங்காய், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், மிளகாய் தூள், மஞ்சள் தூள், கறிவேப்பிலை, மஞ்சள் தூள், உப்பு, பட்டை, கிராம்பு, சோம்பு, எண்ணெய்.

முதலில் தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, தேங்காய், முந்திரி, சோம்பு சேர்த்து மசாலாவை அரைத்து கொள்ள வேண்டும். பின்பு குக்கரில் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, கடற்பாசி,சோம்பு சேர்த்து தாளிக்க வேண்டும். பின்பு அதில் நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

பின்பு அதில் தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்க வேண்டும். இப்போது அதில் மசாலா கலவையை சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 2 விசில் விட்டு இறக்க வேண்டும். கடைசியாக கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து இறக்கினால் சுவையான பலரும் விரும்பும் ரோட்டுக்கடை சால்னா தயார்.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin