கரப்பான் பூச்சிகளும் பூச்சிகளும் சமையலறையில் தாண்டவமாடினால் பார்க்கவே அருவெறுப்பும் அச்சமும் உண்டாகும். இது பல உடல்நல கேடுகளை உண்டாக்க கூடும். ஈ – கோலி மற்றும் சால்மொனெல்லா போன்ற நோய்களையும் ஏற்படுத்தலாம். அதனால் வீட்டையும் சுற்றுப்புறத்தையும் கரப்பான் பூச்சிகளும் பூச்சிகளும் இல்லாமல் எப்படி பாதுகாப்பது என்பதை பார்க்கலாம்.
இந்த பதிவை பற்றிய முழு விவரமும், வீடியோ பதிவும் அதில் அடங்கி உள்ள குறிப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கரப்பான் பூச்சிகள் வெப்பமான மற்றும் ஈரப்பதமான காலநிலையிலும் செழித்து வளரும். பழைய, அழுகிய மர கதவுகள் மற்றும் ஜன்னல்கள் கொண்ட பழைய வீட்டில் கரப்பான் பூச்சி அதிகமாக வளர்கிறது. உணவை சமைத்த சில நேரங்களில் சமையலறையில் ஊர்ந்து செல்லும் கரப்பான் பூச்சிகள் மற்றும் பூச்சிகள் காணலாம். இதைவிட அருவருப்பான விஷயம் எதுவுமே இல்லை. தினமும் சமையலறையில் சுத்தம் செய்தாலும் பூச்சிகள் வருவதை தடுக்கமுடியவில்லையே என்று நினைக்கலாம். கரப்பான் பூச்சிகள் அலமாரிகளிலும் மூலை முடுக்குகளிலும் வசிப்பதோடு அது இனப்பெருக்கமும் செய்யலாம். இது ஆரோக்கியத்துக்கு தீங்கு விளைவித்து பல நோய்களை உண்டாக்கவும் செய்யும். இது படர்ந்த உணவு விஷத்தை உண்டாக்கும். அதனால் சரியான முறையில் சுத்தம் செய்வதோடு அதை தடுக்கவும் மீண்டும் வராமல் தடுக்கவும் என்ன செய்யலாம் என்பதை பார்க்கலாம்.

வெந்நீரில் எலுமிச்சை சாறு கலந்து பேக்கிங் சோடா கலந்து நன்றாக குலுக்கி எடுக்கவும். இந்த நீரை கிச்சன் மேடை, சிங்க், கீழ் உள்ள பகுதிகளை சுற்றி கழுவவும். கரப்பான் பூச்சி அதிகமாக இருந்தால் தினமும் மூன்று வேளை இதை செய்யவும். தொடர்ந்து செய்து வந்தால் கரப்பான் பூச்சி வெளியேறுவதோடு அதன் இனப்பெருக்கமும் தடுக்கப்படும். அதனோடு மற்ற பூச்சிகளும் வராமல் இருக்கும்.

இது எளிமையான பேக். நீங்கள் உங்கள் சமையலறையில் இதை வைத்திருக்கலாம். வெதுவெதுப்பான நீரை எடுத்து வெள்ளை வினிகர் சம அளவு கலந்து கொள்ளவும். சமைத்து முடித்ததும் கேஸ் அடுப்பை இந்த கரைசல் உள்ள இடத்தில் விட்டு சுத்தம் செய்யவும். பகல் வேளைகள் அல்லாமல் இரவில் படுக்க செல்வதற்கு முன்பும் அடுப்பை இந்த கலவை கொண்டு சுத்தம் செய்யவும். எஞ்சியிருக்கும் கலவையை சிங்க் பகுதியில் ஊற்றிவிடவும். இது குழாய்கள் மற்றும் வடிகால்களை கிருமி நீக்கம் செய்து கரப்பான் பூச்சிகளை வெளியேற்றுகிறது.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin