இளமையாக இருக்க வேண்டும் என்று சருமத்தை மட்டும் பாதுகாத்தால் போதாது. இளமையை கூந்தலின் நிறத்தை கொண்டும் கணக்கிடுவார்கள். அதனால் தான் நடுத்தர வயதில் இருப்பவர்களின் கூந்தல் கருமையாக இருந்தாலும் உங்களுக்கு வயதான தோற்றமே தெரியலியே என்று ஆச்ச்சரியத்தோடு சொல்கிறோம். இந்த பதிவை பற்றிய முழு விவரமும், வீடியோ பதிவும் அதில் அடங்கி உள்ள குறிப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நரை முடி பிரச்சனை வழுக்கை பிரச்சனையை காட்டிலும் மோசமானது. கூந்தல் உதிர்வு, கூந்தல் மெலிவு, நுனி பிளவு போன்ற பிரச்சனைகளை இயல்பாக கடந்துவிடுபவர்கள் கூட நரைமுடி வந்தால் அதிகமான பாதிப்பை பெற்றுவிடுகிறார்கள். இந்த நரைமுடியை போக்க இயற்கை ஹேர் டை உண்டு என்றாலும் சற்று மெனக்கெட்டால் மட்டுமே கருமையான நிறத்தை பெறமுடியும். அப்படியான ஒன்றை குறித்து பார்க்கலாம். டை பயன்படுத்துவதற்கு முன் தினம் இரும்பு வாணலில் தேவையான அளவு அல்லது 5 டீஸ்பூன் பொடியை போட்டு வறுக்கவும். இது கருமை நிறம் அடையும் வரை வைத்திருந்து. பிறகு அரை டம்ளர் நீர் விட்டு கொதிக்க விடவும். அவை கொதித்ததும் வாணலை இறக்கி நன்றாக பேஸ்ட் பதத்துக்கு கலந்து அப்படியே விடவும். மறுநாள் காலை பயன்படுத்தலாம்.

முதலில் கூந்தலை சிக்கில்லாமல் சீவி விடவும். அழுக்கு இருந்தால் டை ஒட்டாது. அதனால் தலைக்குளியலுக்கு பிறகு அல்லது அடுத்த நாள் இந்த டை பயன்படுத்தலாம். கூந்தலை சீவி பகுதிபகுதியாக பிரித்து கைகளால் அல்லது பிரஷ் கொண்டு டை போட பயன்படுத்துங்கள்.முதலில் நரைமுடி இருக்கும் இடங்களில் மயிர்க்கால்களில் நன்றாக தடவி விடுங்கள். பிறகு உச்சந்தலை முழுவதும் தடவி நுனி வரை தடவி எடுங்கள். பொதுவாக வெளியில் தயாரிக்கப்படும் ஹேர் டை வகைகள் 15 முதல் 20 நிமிடங்கள் வரை தான். ஆனால் இந்த இயற்கை ஹேர்டை நன்றாக கூந்தலில் பிடிக்க குறைந்தது 1 மணி நேரம் வரையாவது ஆகலாம்.

உங்களின் நேரத்துக்கேற்ப 2 மணி நேரம் வரை விட்டு பிறகு கூந்தலை வெதுவெதுப்பான அல்லது மந்தமான நீரில் ஷாம்பு, சீயக்காய் இல்லாமல் அலசி எடுக்கவும்.அதிக அழுத்தத்தோடு துவட்டாமல் மென்மையாக துவட்டி இயற்கையாக உலர விடவும். வாரத்துக்கு இரண்டு நாள் வீதம் மாதத்தில் எட்டு நாட்கள் அல்லது கிடைக்கும் நேரத்தில் இன்னும் இரண்டு முறை சேர்த்துபயன்படுத்துங்கள். ஒரே மாதத்தில் பலன் தெரியக்கூடும்.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin