இன்று சுட்டீஸ்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சந்திக்கும் முக்கியமான பிரச்சனை அதிகப்படியான எடை. உய ரத்துகேற்ற எடை இருந்தால் ஆரோக்கியத்தில் பிரச்சனை இல்லை. ஆனால் அதிகப்படியான எடை மேலும் மேலும் அதிகரி க்க தொடங்கும்போது அவை உடலிலும் பல நோய்களை உண்டாக்க தொடங்குகிறது. இந்த பதிவை பற்றிய முழு விவரமும், வீடியோ பதிவும் அதில் அடங்கி உள்ள குறிப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இரத்த அழுத்தம், நீரிழிவு. தைராய்டு, ஹார்மோன் சுரப்பில் மாற்றம், மன அழுத்தம் என்று பிரச்சனைகளை வரிசை கட்டி வரவைக்கிறது. வயதான பிறகு வரும் உபாதைகள் 30 வயது தொடரும் போதே வந்துவிடுகிறது.இத்தகைய பிரச்சனைக ளை சந்திக்காமல் இருக்க வேண்டுமெனில் ஆரம்ப கட்டத்திலேயே உடல் எடையைக் குறைக்க முயற்சி செய்யவேண்டும்.

தினமும் காலையில் வெறும் வயிற்றில் நீரை கொதிக்க வைத்து ஒரு டீஸ்பூன் சீரகத்தைச் சேர்த்து கொதிக்க வைத்து எலுமிச்சைச் சாறு இரண்டு டீஸ்பூன் சேர்த்து குடித்துவரலாம். சீரகம் உடலில் இருக்கும் கார்போ ஹைட்ரேட், கொழுப்பைக் கரைக்கிறது. உடலில் மெட்டபாலிசத்தை அதிகரித்து செரிமானத்தைத் தூண்டு கிறது. நாள் முழுவதும் சாப்பிட்ட பிறகு இந்த தண்ணீரைக் குடித்து வரலாம். சீரகத்தைக் கொதிக்க வைத்து அல்லது மூன்று மணிநேரம் சீரகம் ஊறவைத்த தண்ணீரையும் குடிக்கலாம். சீரக நீர் இல்லையென்றால் எப்போதும் மிதமான வெந்நீரை பருகுங்கள். உடல் எடையைக் குறைய செய்யும் அற்புதமான மருந்தில் இதுவும் ஒன்று. பலன் சற்று பொறுமையாக கிடைக்கும். அவ்வளவே.

வாரம் மூன்று நாள்கள் குறையாமல் முட்டை கோஸ் சமையலை எடுத்துக்கொள்ளுங்கள். முட்டை கோஸில் பைட்டோ-நியூட்ரியன்ட்களும் நார்ச்சத்தும் நிறைந்திருக்கிறது. இதைச் சாறாக்கி குடிக்கும் போது பசி உணர்வை அடக்கி வைக்கும். மேலும் உடல் உள்ளுறுப்புகளில் இருக்கும் டாக்ஸின்களை ஒழிக்கும். குறிப்பாக தொப்பையிருப்பவர்கள் தட்டை வயிறை பெற முட்டை கோஸை அதிகமாக எடுத்துகொள்ளலாம். குறைந்த கலோரி கொண்ட முட்டைகோஸ் உடல் எடை குறைப்பதில் கணிசமாக உதவுகிறது என்று சொல்ல லாம். இதே போன்று ப்ரக்கோலி, கேரட் சாறு, காலிஃப்ளவரும் உடல் எடைக்கு உதவும்.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin