பொதுவாக காலை உணவு என்பது ஒரு உணவல்ல. அது ஒரு எரிபொருள். ஆமாங்க நம் உடலுக்கு தேவையான ஆற்றலைத் தருவது இது தான். எனவே இனி காலையில் எழுந்து அரக்க பரக்க எதையாவது சமைத்து வாயில் போட்டுக் கொண்டு ஓடாதீர்கள். கண்டிப்பாக இது உங்கள் உடல் நலனை பாதிக்கும். இந்த பதிவை பற்றிய முழு விவரமும், வீடியோ பதிவும் அதில் அடங்கி உள்ள குறிப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களில் மிகவும் பாப்புலரான உணவுகளை உள்ளடக்கிய தென்னிந்திய உணவு வகைகள், அதன் கலர்புல்லான சுவைக்கும் இனிப்பு முதல் புளிப்பு, மசாலா வரையிலான சுவைகளுக்கு பெயர் போனது. அதிலும் முக்கியமாக அரிசி அல்லது அரிசி சார்ந்த உணவுகளை தான் நாம் பெரும்பாலும் உட்கொள்வோம். சரி வாருங்கள் சூப்பரான காலை உணவுகளின் பட்டியலை இங்கே காண்போம். இதில் உங்களுக்கு பிடித்ததை ட்ரை செய்து உங்கள் குடும்பத்தாரை அசத்துங்கள். தென்னிந்திய உணவுகள் முக்கியமாக புளிக்கவைக்கப்படுவதால் அவை குடல் மைக்ரோபயோட்டாவுக்கு ஆரோக்கியத்தை தருகிறது. மேலும் இவை ஜீரண சக்தியை அமர்களப்படுத்தி உங்களை ரிலாக்ஸாக்குகிறது.

குறிப்பாக காலையில் எழுந்ததும் 5 நிமிடங்களில் சமைக்கும் பாஸ்ட் ஃபுட்களெல்லாம் நிச்சயம் தவிர்த்து விடுங்கள். அப்படியே இதைச்சாப்பிட்டாலும் இதில் எந்த வித ஊட்டச்சத்துக்களும் இருப்பதில்லை. இவை நாள் முழுவதும் ஆற்றலைத் தருகிறது.

இன்னும் சிலர் காலை உணவை எடுத்துக்கொள்வதும் இல்லை. இப்படி நீங்கள் சாப்பிடாமல் இருந்தால் பசி அதிகரித்து மதிய வேளையில் நிறைய சாப்பிட ஆரம்பித்து விடுவீர்கள். இப்படி எக்கு தப்பாக சாப்பிடுவது காலப்போக்கில் உடல் எடை அதிகரிக்க காரணமாகி விடும். எனவே எப்பொழுதும் காலை உணவை ஆரோக்கியமாக அமைத்துக் கொள்வது அந்த நாள முழுவதும் உங் களைச் சுறுசுறுப்பாக ஓட வைக்கும். கார்போஹைட்ரேட், புரோட்டீன் மற்றும் நார்ச்சத்துகள் அடங்கிய உணவு களை எடுத்துக் கொள்ள வேண்டும் என்கிறார்கள் ஊட்டச்சத்து நிபுணர்கள். இதோ உங்களுக்கான ஆரோக்கி யமான காலை உணவுகளின் பட்டியல்

By admin