இந்த காலத்தில் சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலருக்கும் கண் பார்வை குறைபாடு ஏற்படுகிறது. மொபைல் போன், லேப்டாப், கம்ப்யூட்டர் போன்ற பொருட்களை உபயோகிப்பதால் இந்த குறைபாடு அதிகம் உள்ளது. இதனால் பலர் கண்ணாடி அணிய வேண்டிய நிலை ஏற்படுகிறது. இது போன்ற குறைபாடுகளை நாம் உணவு மூலமே சரியலாம். அந்த வகையில் கண் பார்வை சரியாக சித்த மருத்துவம் கூறும் சில குறிப்புகளை இங்கே காணலாம். இந்த பதிவை பற்றிய முழு விவரமும், வீடியோ பதிவும் அதில் அடங்கி உள்ள குறிப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
காலையில் எழுந்தவுடன் கண்கள் மீது தண்ணீரை நன்றாகத் தெளித்து 3, 4 முறை கண்களை நன்றாக சுத்தப்படுத்துங்கள்.வாய் நிறைய தண்ணீரை நிரப்பிக்கொண்டு, பின் கண்கள்மீது குளிர்ந்த தண்ணீரைக் கொண்டு நன்றாக கழுவுங்கள். இதனால் கண்கள் நன்றாக விரிந்தவாறு இருக்கும். பிறகு, ஆப்டிக்கல்ஸ் கடைகளில் எளிதாகக் கிடைக்கும், ஐ வாஷ் கப் ஒன்று வாங்கிக்கொள்ளுங்கள்.
ரோஸ் வாட்டரை 15 துளிகள் இதில் நிரப்பி, பின் தண்ணீரால் இந்த கப்பை நிரப்பி, கண்களை திறந்தவாறு இந்த கப் பயன்படுத்துங்கள். தண்ணீர் வெளியில் வராதவாறு கப்பை அழுத்தி பிடித்துக்கொண்டு, தலையை மேலே தூக்குங்கள். கண் விழிகளை சுற்றுங்கள். ரோஸ் வாட்டர் கண்களின் மேற்பரப்பை நன்றாக சுத்தம் செய்யுமாறு கண் விழியை சுற்றுங்கள். ஒரு நிமிடம் களித்து, தண்ணீரை மாற்றி அடுத்த கண்ணையும் இவ்வாறு சுத்தம் செய்யுங்கள். கண்களில் உள்ள தொற்றை சரி செய்ய மிகவும் உதவும். மேலும், கண்களில் ஏற்படும் அழுத்தத்தை குறைத்து, கண்களுக்கு நல்ல குளிர்ச்சியைத் தரும்.
வேலை செய்யும்போது ஒவ்வொரு 45 நிமிடங்களுக்கு ஒரு முறை சிறிது தண்ணீர் பருகுங்கள். பின் கைகளைத் தேய்த்து, மூடிய கண்கள்மீது வைக்கவும். கைகளில் உள்ள அக்குப்ரேசர் புள்ளிகளை அழுத்துங்கள். ஒவ்வொருமுறை சிறுநீர் கழிக்கச் செல்லும்போதும், வாயில் தண்ணீர் நிரப்பி, கண்களைக் கழுவுங்கள்.