அதுவும் அந்த கருவாட்டை நமே வீட்டில் செய்தால் எப்படி இருக்கும் . ஆமாங்க நாமே தான் இப்பொழுது அந்த கருவாட்டை வீட்டிலேயே செய்யப்போகிறோம். இந்த பதிவில் அதை பற்றி பார்க்க போகிறோம் மேலும் அதை வைத்து எப்படி கருவாட்டு குழம்பு செய்யலாம் என்றும் பார்க்க போகிறோம். இந்த பதிவை பற்றிய முழு விவரமும், வீடியோ பதிவும் அதில் அடங்கி உள்ள குறிப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வாணலியை வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வரமிளகாய் சேர்த்து வறுத்து, அத்துடன் அரைத்து வைத்துள்ள வெங்காயம், பூண்டு, மிளகு, சீரகம், சேர்த்து வதக்கிக் கொள்ளவும். அதனை குளிர வைத்து மிக்சியில் அரைத்து கொள்ளவும். அம்மியில் அரைத்தால் அதன் சுவைக் கூடும். இதனுடன் துருவிய தேங்காயையும் அரைத்துக் கொள்ளவும்.

பியினர் கருவாட்டை நன்றாக சுத்தம் செய்து மீண்டும் வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து தாளித்து தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். அதன் பின் நறுக்கிய கத்தரிக்காய், உருளைக்கிழங்கு சேர்த்து நன்கு வேகவிடவும்.

காய் வெந்ததும் உப்பு சேர்த்து மேலும் அரைத்து வைத்துள்ள மசாலா கலவையை சேர்த்து கொதிக்க விடவும். நன்கு கொதிந்தபின் கரைத்து வைத்துள்ள புளியை ஊற்றி கொதிக்க விடவும். அதன் பின்னர் கருவாட்டை சேர்த்து 5 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கினால் ருசியான கிராமத்து கருவாட்டு குழம்பு தயார்.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin