கடன் என்பது இன்று பலருக்கும் இருக்கும் மிகப் பெரிய பிரச்சனையாகவும், கவலையாகவும் இருக்கிறது. கடன் பிரச்சினையை தீர்க்க என்ன தான் வழி? என்று தெரியாமல் புலம்பிக் கொண்டு இருப்பவர்களுக்கு இந்த பதிவு உபயோகமாக இருக்கும். ஒருவருக்கு ஜாதகத்தில் தன்னுடைய கர்ம வினைகளை அனுபவித்து ஆக வேண்டும் என்பதற்காக சில கிரகங்கள் ஒன்றாக இணையும் சமயத்தில் நமக்கு கடன் தொல்லைகள், பகைவர் தொந்தரவுகள், தீராத நோய்கள் என்று ஏதாவது ஒரு துன்பங்கள் வந்து கொண்டு இருக்கும். அதற்கான தீர்வை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள். இந்த பதிவை பற்றிய முழு விவரமும், வீடியோ பதிவும் அதில் அடங்கி உள்ள குறிப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

செவ்வாயும், சனியும் சேரும் பொழுது அந்த ஜாதகருக்கு தீராத கடன் பிரச்சனை ஏற்படுகிறது. எப்படியாவது கட்டி விடுவோம் என்கிற எண்ணத்தில் தான் நீங்கள் கடன் வாங்கி இருப்பீர்கள். அதிலும் ஒரு சிலருக்கு கட்ட முடியாது என்று தெரிந்தும் வேறு வழியே இல்லாத சூழ்நிலையில் கடன் வாங்கியிருப்பார்கள். ஆக இந்த இருவராலும் கடனை கட்ட முடியாது போய்விடும். அது தான் இப்போது பிரச்சனையாக இருக்கும். குடும்பத்தில் பிரச்சனை, வருமான தடை, உடல் நிலை பாதிப்புகள் என்று ஏதாவது ஒரு சிக்கல்களில் மாட்டிக் கொண்டு வாங்கிய கடனுக்கு வட்டியை கூட செலுத்த முடியாத சூழ்நிலையில் பரிதவித்து நிற்பார்கள். இது போன்றவர்களுக்கு எம்பெருமான் முருகப் பெருமான் துணையாக இருப்பார்.

முருகப் பெருமானை நம்பியவர்கள் எப்போதும் கைவிடப்பட்டது இல்லை. முருகனை அன்றி நம் பாரத்தை தாங்க கூடியவர்கள் வேறு யாருமில்லை. கடன் என்ற சுமையை முருகப் பெருமானிடம் இறக்கி வைத்து விடுங்கள். குறிப்பாக திருச்செந்தூர் மற்றும் பழனி முருகனை செவ்வாய் ஹோரையில் வணங்கி விட்டு கடனை செலுத்தினால் கடன் தொல்லை தீரும் என்பது ஐதீகம்.

அதே போல் சரபேஸ்வரர் சன்னதியில் இந்த விளக்கு ஏற்றி பாருங்கள் நல்ல பலன் கிடைக்கும். சரபேஸ்வரர் என்பவர் மிகுந்த சக்தி வாய்ந்த பறவை, மனிதன் மற்றும் விலங்கு ஆகிய மூன்றின் உருவம் கொண்டவர். இரணியனை அழித்த நரசிம்மரின் கோபம் உக்கிரமானது. அதனை தடுக்க யாராலும் முடியவில்லையாம். அவரின் கோபம் தணிக்க ஈசன் சரபேஸ்வர உருவம் எடுத்ததாகவும் புராணங்கள் கூறுகிறது. பிரத்தியங்கரா தேவியும், சூலினி என்கிற தேவியும் சரபேஸ்வரரின் துணையாக இருப்பவர்கள்.

By admin