காகம் என்று சொன்னதும் நினைவிற்கு வருவது நம்முடைய முன்னோர்கள் தான். நம்முடைய குடும்பத்தில் இறந்து போனவர்கள் நம்மை காண்பதற்காக இந்த பூலோகத்திற்கு திரும்பி வருவார்கள். இறந்த ஆத்மா இந்த பூமிக்கு நேரடியாக வர முடியாது என்ற ஒரு காரணத்தினால், இறந்த அந்த ஆத்மாக்கள் காகத்தின் ரூபத்தில் நம்முடைய பூமிக்கு வருவதாக சாஸ்திரங்கள் சொல்லுகின்றது. இந்த பதிவை பற்றிய முழு விவரமும், வீடியோ பதிவும் அதில் அடங்கி உள்ள குறிப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் நம்முடைய சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ள விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டுத் தான், முன்னோர்களின் வழிபாட்டில் இந்த காகத்திற்கு முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. இதோடு மட்டுமா? அந்த எமலோகத்தில் வாசலில் எமனுக்கு வாகனமாக இந்த காகம் இருப்பதாகவும் சில குறிப்புகளில் சொல்லப்பட்டுள்ளது.

சனிபகவானுக்கு வாகனமாக இருப்பதும் இந்த காகம் தான். இப்படியாக நம்முடைய இந்து சாஸ்திரத்தின் அடிப்படையில் இந்த காகத்திற்கு பல வகைகளில் முன்னுரிமை கொடுத்து, சாஸ்திர சம்பிரதாயங்களை பின்பற்றி வருகின்றோம். இப்படிப்பட்ட காகத்திற்கு சாதம் வைக்கும் போது நாம் செய்யக்கூடிய சில தவறுகள் என்னென்ன. அந்தக் காகம் நம் வீட்டில் வந்து எந்த திசையில் கரைந்தால் என்னென்ன பலன்கள் என்பதைப் பற்றிய சில தகவல்களை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

காகத்திற்கு சாதம் வைக்கும் போது எச்சில் சாப்பாட்டை வைக்கக்கூடாது. இது நாம் எல்லோருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான். இருப்பினும் இந்த இடத்தில் நினைவு கூற வேண்டியது அவசியம். சாப்பிட்டு முடித்து மீதம் இருக்கும் எச்சில் சாப்பாடாக இருந்தால், அதை வீதியில் வரும் நாய்களுக்கு வைக்கலாம். குறிப்பாக காகத்திற்க்கும் பசு மாட்டிற்கும் எச்சில் சாப்பாட்டை போடக்கூடாது. காகமும் பசுமாடும் எச்சில் இலைகளில் இருந்து தானாகவே சாப்பிட்டால் அதன் மூலம் நமக்கு ஏதும் தோஷம் ஏற்படாது. நம் கையால் எச்சில் சாதத்தை காகம் பசு இந்த இரண்டு உயிரினங்களுக்கும் கொடுப்பது தவறு. அடுத்தபடியாக உடலளவில் சுத்தம் இல்லாதவர்கள் காகத்திற்கு சாதம் வைக்கக்கூடாது என்றும் சொல்லப்பட்டுள்ளது. பெண்கள் தீட்டான சமயத்தில் காகத்திற்கு சாதம் வைக்காதீர்கள். கணவன் மனைவி ஒன்றாக இருந்து விட்டு, காலையில் தீட்டுடன் இருக்கும்போது, சுத்தம் இல்லாத சமயத்திலும் காகத்திற்கு சாதம் வைக்க கூடாது.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin