ஒவ்வொருத்தர் வீட்டில் இட்லி சும்மா பஞ்சு போல வருவதை பார்க்கும் பொழுது நமக்கு ஆத்திரமாக வரும். ஏன்னா நமக்கு அந்த மாதிரி வரலையே என்கிற கடுப்பு தான். இட்லி மாவு அரைப்பது என்பது கூட ஒரு கலை தான். அது எல்லாருக்கும் வந்து விடுவதில்லை. அந்தக் கலையை நாமலும் கற்றுக் கொள்வோமே! இந்த உலகத்தில் முடியாதது என்று ஒன்றுமில்லை. முயற்சி செய்ய வேண்டும். அதற்குரிய சூட்சமத்தை கற்றுக் கொள்ள வேண்டும், அவ்வளவு தான். இட்லியை பஞ்சு போல உங்க வீட்டில் செய்ய இந்த 5 டிப்ஸ்களை ஃபாலோ செய்தால் போதும். அதை எப்படி செய்வது? என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள். இந்த பதிவை பற்றிய முழு விவரமும், வீடியோ பதிவும் அதில் அடங்கி உள்ள குறிப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


முதலில் அரிசி, உளுந்து, வெந்தயம் இந்த மூன்று பொருட்களை வைத்து சாதாரணமாக ஆரம்ப நிலையில் இருப்பவர்கள் கூட சுலபமாக செய்யும் வகையில் எப்படி செய்வது? என்பதை பார்ப்போம். 250 கிராம் கொண்ட ஆழாக்கு ஒன்று எடுத்துக் கொள்ளுங்கள். மூன்றறை ஆழாக்கு இட்லி அரிசி எடுத்துக் கொள்ளுங்கள்.

அதில் ஒரு டீஸ்பூன் வெந்தயம் சேர்த்து ஊற வைத்துக் கொள்ளுங்கள். இதற்கு உளுந்து ஒரு ஆழாக்கு இருந்தால் போதுமானது. அதாவது ஒரு பங்கு உளுந்துக்கு, மூன்றரை பங்கு இட்லி அரிசி எடுத்து இரண்டையும் இரண்டு முறை நன்றாக கழுவி சுத்தமான தண்ணீர் ஊற்றி தனித்தனியாக இரண்டு மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளுங்கள். உளுந்து ரொம்ப பெரிசா இல்லாம சிறியதாக வாங்கினால் உபரி அதிகம் வரும்.

ஊற வைத்த தண்ணீரை பயன்படுத்தி தான் மாவு அரைத்து முடிக்க வேண்டும். உளுந்து அரைக்க குறைந்த பட்சம் 30 நிமிடம் வரை செலவிடுங்கள். உளுந்து எந்த அளவிற்கு நைசாக அரைக்கிறதோ, அந்த அளவிற்கு இட்லி சாஃப்டாக வரும். 30 நிமிடம் இடையிடையே தண்ணீர் விட்டு நன்கு பொங்க பொங்க ஆட்டி எடுக்க வேண்டும். தண்ணீர் தொட்டு உளுந்தை நீங்கள் எடுத்து பார்த்தால் வழுக்கிக் கொண்டு கீழே பந்து போல் விழ வேண்டும். அது தான் இட்லிக்கு உளுந்து சரியான பதம்.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin