சில பேர் வீடுகளில் பெங்களூர் ரோஸ் செடி வகைகளை வாங்கி வைத்தால், நன்றாக பூக்கும். ஆனால், இந்த வாசம் மிகுந்த பன்னீர் ரோஜா செடியில் பூக்கள் பூப்பது என்பது கொஞ்சம் கஷ்டமான விஷயம் தான். நுண்ணுயிர் சத்துக்கள், மண்ணுக்கு தேவையான ஊட்டச்சத்து, சரியான விகிதத்தில் இருந்தால் தான், பன்னீர் ரோஜா செடியில் பூக்கள் பூக்க ஆரம்பிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பன்னீர் ரோஜா செடியில், விரைவாக அதிகப்படியான பூக்களை பூக்க வைக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த பதிவை பற்றிய முழு விவரமும், வீடியோ பதிவும் அதில் அடங்கி உள்ள குறிப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ரோஜா செடியை பொருத்தவரையில் ஆண் பெண் என்ற வித்தியாசமெல்லாம் இல்லாமல் அனைவருமே ரோஜா பூக்களை ஆசையோடு வளர்க்கிறார்கள். ரோஜா தாவரம் ஆசியா கண்டத்தை தாயகமாக கொண்டது. ரோஜா பூக்கள் கிட்டதட்ட 700-வகைகளுக்கும் மேல், பல நூறு அழகிய வண்ணங்களில் காணப்படுகிறது. ரோஜா என்ற சொல் தெற்கு இத்தாலியின் ஆஸ்கன் மொழியிலிருந்து பெறப்பட்ட வார்த்தையாகும். ரோஜா பூக்கள் அழகியல் சாதனங்கள் தயாரிப்பிலிருந்து ஆண்மை குறைபாடு வரை பல்வேறு பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ரோஜா பூக்கள் நறுமணத்திற்காகவும், வண்ணத்திற்காகவும், அழகிற்காகவும் இப்படி பல்வேறு காரணங்களுக்காக பலரால் விரும்பி வளர்க்கப்படுகிறது. நர்சரி கடைகளில் கொத்துகொத்தாக பூக்கள் பூத்திருப்பதை பார்த்து ஆசையோடு வீட்டிற்கு கொண்டு வந்தால், அதிக பட்சம் 10-நாட்களிலே இறந்துவிடும். நான் கேள்வி பட்டிருக்கிறேன்., சிலர் ரோஜா செடி வளர்க்கின்ற ஆசையே போய்விட்டது என்று வருத்தப்பட்டு கூறுவார்கள். ரோஜா தாவரங்கள் வளர்ப்பதில் சிலவற்றை மட்டும் நுணுக்கமாக கவனித்தால் போதும். ரோஜா செடிகளை அல்ல; ரோஜா தோட்டமே நீங்களும் அமைக்கலாம். உதாரணத்திற்கு சிலவற்றை இங்கே குறிப்பிடுகிறேன்.

பன்னீர் ரோஜா மட்டுமல்ல. பூ பூக்காமல் இருக்கும் எந்த செடிகளுக்கு வேண்டுமென்றாலும் இந்த நுண்ணுயிர் சத்து நிறைந்த தண்ணீரை பயன்படுத்தலாம். இதை வடிகட்டி தான் ஊற்ற வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. இதில் இருக்கும் திப்பியோடு கலந்து, ஊற்றினாலே செடிகளுக்கு ஊட்டச்சத்து அதிகமாக கிடைக்கும்.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin