கேஸ் சிலிண்டர் உங்க வீட்ல அடிக்கடி தீர்ந்து போகுதா?? தீராமல் அதிகநாட்கள் வர எளிமையான வழி இதோ!!

நம் நாட்டில் தற்போது சிலிண்டரின் விலை ஏற்றம் தான் அனைவர் வீட்டிலும் பேசுபொருளாக உள்ளது ஏனெனில் தினமும் நாம் அன்றாடம் எந்த வேலை செய்கிறோமோ இல்லையோ உணவு சாப்பிட்டே ஆக வேண்டும் அதற்கு கேஸ் சிலிண்டரின் தேவை அவசியம் அதை எப்படியெல்லாம் மிச்சம் படுத்தலாம் என்று பார்க்கலாம் முதலில் கேஸ் ஸ்டவ்வில் உள்ள பர்னர் ஆனது எக்காரணத்தைக் கொண்டும் ஈரமாக இருக்கக்கூடாது அதை அவ்வப்போது துடைத்து காய வைக்க வேண்டும் அதேபோல் அதில் எந்தவித அழுக்குகளும் இருக்கக்கூடாது அதையும் சுத்தம் செய்ய வேண்டும் பின்னர் நாம் கேஸ் பற்ற வைக்க உபயோகப்படுத்தப்படும் லைட்டர் நல்ல திறன் உள்ளதாக இருக்க வேண்டும் இல்லையென்றால் நாம் ஐந்தாறு முறை அதை ஆன் செய்ய முயற்சிக்கும் பொழுது வீணாக கேஸ் வெளியேற வாய்ப்புள்ளது.

அதேபோல் லைட்டரை ஈரப்பதம் இருக்கும் இடத்தில் வைக்காமல் நாம் சமைத்து முடித்தவுடன் பர்னர் மீது வைத்து விடலாம் அந்த சூட்டிலேயே அது ஈரப்பதம் இருந்தாலும் காய்ந்துவிடும் மதியம் சமைத்த உணவை இரவில் அல்லது மறுநாள் சூடு செய்யும்பொழுது வீணாக கேஸ் சிலிண்டரை வீணாக்க தேவை இல்லை அதற்கு பதிலாக இரவில் நீங்கள் தோசை ஊற்றினால் தோசை கல் சூடு ஏறும் நேரத்தில் தோசைக்கல் மீது பழைய உணவை வைத்து சூடேற்றி கொள்ளலாம் அதேபோல் இட்லி சமைத்தால் இட்லி குண்டானில் தண்ணீர் ஊற்றி வைத்து அதன்மீது பழைய உணவை வைத்து மூடி வைத்தால் அதுவும் நன்றாக சூடாகி விடும் இட்லியை எடுத்த பிறகும் சுடுதண்ணி சூடாகவே இருக்கும் அதில் நம் பழைய சட்னி அல்லது பொரியல் ஏதாவது வைத்திருந்தால் அதை எடுத்து வைத்து சூடாக்கி கொள்ளலாம்.

அதே போன்று நாம் அன்றாடம் சமைக்கும் பொழுது பாத்திரம் எடுக்கும்போது மிகவும் நீட்டான பாத்திரம் எடுக்காமல் உயரம் குறைவான பாத்திரம் எடுத்து சமைக்கும் நேரமும் மிச்சமாகும் அதேபோல் நமக்கு சிலிண்டரும் மிச்சமாகும் எப்பொழுதும் சமைக்கும்போது குறைவான அளவில் கேஸ்சை வைத்து சமைத்தால் சிலிண்டர் கண்டிப்பாக நாட்கள் அதிகரிக்கும் அதேபோல் நாம் குளிர்சாதன பெட்டியில் இருந்து எடுக்கும் பொருளை 15 நிமிடத்திற்கு முன்பே எடுத்து வைத்து அதன் பின்பு சமைத்தால் சிலிண்டர் கண்டிப்பாக மிச்சமாகும் அதைப்போல் நீங்கள் பாத்திரம் சமைக்க எடுக்கும் பொழுது அதை ஒருமுறை கழுவும் பழக்கம் உடையவர்களாக இருப்பீர்கள் கழுவிட்டு அதில் சிறிதளவு தண்ணீர் இருந்தாலும் அது காயும் வரை நமது சிலிண்டர் வீணாகத்தான் இருக்கும் அதனால் நன்கு பாத்திரத்தை கவுத்து இருக்கும் தண்ணீரை கீழே ஊற்றி விட்டு அதன் பின்பு சமைக்க தொடங்குங்கள் இவ்வாறு நிறைய வழிகள் சிலிண்டரை மிச்சப்படுத்த இருக்கிறது.நம் நாட்டில் தற்போது சிலிண்டரின் விலை ஏற்றம் தான் அனைவர் வீட்டிலும் பேசுபொருளாக உள்ளது ஏனெனில் தினமும் நாம் அன்றாடம் எந்த வேலை செய்கிறோமோ இல்லையோ உணவு சாப்பிட்டே ஆக வேண்டும் அதற்கு கேஸ் சிலிண்டரின் தேவை அவசியம் எனவே அதை நாமும் தெரிந்து கொண்டு மற்றவர்களுக்கும் பகிர்வோம்.