சருமத்தை பாதுகாக்கும் பல வகையான பொருட்களில் முதன்மையான இடம் இந்த ஒரு கைப்பிடி மண்ணுக்கு உள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது. நம்முடைய முன்னோர்கள் பின்பற்றி வந்த பழக்க வழக்க முறைகளில் இதுவும் ஒன்று. காலப்போக்கில் இது மறைந்து விட்டது. கரையான் புற்று என்று சொல்லுவார்கள். அந்த மண்ணைப் பற்றி தான் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இதை நம்முடைய ஊர்களில் பாம்பு புற்று என்று சொல்லுவார்கள். இது பாம்பு கட்டும் புற்று அல்ல. கரையான்கள் சேர்ந்து கட்டும் புற்றில், பாம்பு வந்து குடி கொள்ளும். இந்தப் புற்று மண்ணுக்குத் தான் நம்முடைய சரும பிரச்சனைகளை தீர்க்கும் சக்தி அதிகமாகவே உள்ளது. இந்த பதிவை பற்றிய முழு விவரமும், வீடியோ பதிவும் அதில் அடங்கி உள்ள குறிப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அந்த மண்ணைக் கொண்டு வந்து வெய்யிலில் போட்டு நன்றாக காயவைத்து சல்லடையில் சலித்து நைசாக எடுத்துக்கொள்ள வேண்டும். இதை ஒரு பாட்டிலில் போட்டு சேகரித்து வைத்தால் எப்போது வேண்டும் என்றாலும் நாம் பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஒரு சிறிய கிண்ணத்தில் 2 அல்லது 3 டேபிள் ஸ்பூன் மண்ணை (அ) களிமண் போட்டு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி கரைத்து 1 மணி நேரம் ஊறவைத்தால் போதும். ஊறவைத்த இந்த மண் கலவையை உங்களுடைய சருமத்தில் எங்கெல்லாம் பிரச்சனை உள்ளதோ அந்த இடத்தில் எல்லாம் தடவி, 30 நிமிடங்கள் மிதமான வெயிலில் இருந்து விட்டு அதன் பின்பு வந்து குளித்து விடவேண்டும்.

சருமத்தில் படை பிரச்சனை, சொரியாசிஸ் பிரச்சனை, உடம்பில் கொப்பளம் ஆங்காங்கே இருப்பது, முகப்பரு பிரச்சனை, இதுதவிர தோல் சம்பந்தப்பட்ட வேறு எந்தப் பிரச்சினைக்கும் இந்த மண்குளியல் ஒரு நிரந்தர தீர்வைக் கொடுக்கும். முடிந்தால் நிறைய மண் கிடைத்தால் உங்களுடைய உடல் முழுவதும் கூட இந்த மண் கலவையை தடவி வெயிலில் காய வைத்துவிட்டு அதன் பின்பு குளிப்பது நல்லது. சருமத்தில் பிரச்சனை உள்ளவர்கள் மாதம் 1 முறை தாராளமாக இந்த மண் குளியல் எடுக்கலாம்.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin