நம்முடைய வாழ்க்கையில் ஏற்படக்கூடிய பலவிதமான பிரச்சனைகளுக்கு ஒரே ஒரு வேர் தீர்வாக கிடைக்கிறது என்றால், அது கட்டாயம் நமக்கு அதிர்ஷ்டம் தரக்கூடிய வேர் என்றுதான் சொல்ல வேண்டும். கண் திருஷ்டி படாமல் இருக்க வேண்டும் என்றாலும், குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றாலும், தொழில் முடக்கம் நீங்கி நல்ல லாபம் பெற வேண்டும் என்றாலும், பணத்தட்டுப்பாடு நீங்க வேண்டும் என்றாலும், இந்த ஒரு வேர் போதும். நம்ப முடியவில்லையா? மேற்குறிப்பிட்டுள்ள பலவகையான பிரச்சனைகளுக்கு எந்தெந்த முறையில், இந்த வேரை பயன்படுத்தலாம் என்பதை பற்றியும், பல விதமான நன்மைகளை நமக்கு தரக்கூடிய அந்த வேர், எந்த வேர்? என்பதைப் பற்றியும் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
இந்த பதிவை பற்றிய முழு விவரமும், வீடியோ பதிவும் அதில் அடங்கி உள்ள குறிப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நாம், இந்த பதிவில் வெள்ளெருக்கன் செடியினுடைய வேர் பற்றிய மகிமைகளை பற்றித்தான் தெரிந்து கொள்ளப் போகின்றோம். பொதுவாகவே, இந்த வெள்ளெருக்கன் செடியை சிவபெருமானின் அம்சம் என்று கூறுவார்கள். வெள்ளெருக்கன் பூ வானது, விநாயகருக்கு மிகவும் உகந்தது. இந்த வெள்ளெருக்கன் வேரை பயன்படுத்தி பிரச்சனைகளை சுலபமாக தீர்க்க, பரிகாரத்தை எப்படி செய்யலாம் என்பதைப் பற்றி பின்வருமாறு தெரிந்து கொள்ளலாம்.

முதலில் வெள்ளருக்கன் செடியிலிருந்து வேரை எடுப்பதற்கு முன்பு, மஞ்சள் நீர் ஊற்றி, ‘நம்முடைய வாழ்க்கையின் நலனிற்காக தான் அந்த வேறு எடுக்கப்படுகிறது’ என்ற வேண்டுதலோடு, அந்த வெள்ளருக்கன் வேரை செடியிலிருந்து எடுத்துக்கொள்ள வேண்டும். காப்பு கட்டி செடியிலிருந்து வேர் எடுக்க தெரிந்தவர்கள், காப்புகட்டி வேரை எடுத்துக் கொள்ளலாம். முக்கியமான குறிப்பு. வியாழன், ஞாயிறு இந்த இரண்டு கிழமைகளில் பூசம் நட்சத்திரம் வரும் தினத்தன்றுதான் எருக்கன் செடியில் இருந்து வேர் எடுக்கப்பட வேண்டும். அப்போதுதான் பரிகாரம் பலிக்கும்.

இவ்வாறாக வெள்ளெருக்கன் செடியில் இருந்து எடுத்துவரப்பட்ட வேரை முதலில் மஞ்சள் நீரால் கழுவி, அதன் பின்பு சுத்தமான தண்ணீரில் கழுவி, பூஜை அறையில் விநாயகரின் படத்தின் முன்பு வைக்கவேண்டும். அதன்பின்பு உங்களுக்குத் தெரிந்த வினாயகர் மந்திரம், வினாயகர் துதி எதுவாக இருந்தாலும் 108 முறை உச்சரிக்க வேண்டும். ‘ஓம் விக்ன விநாயகா போற்றி’ ‘ஓம் விக்னேஷ்வரா போற்றி’ ‘ஓம் கணபதியே நமஹ’ இதில் எது வேண்டும் என்றாலும் உச்சரித்துக் கொள்ளலாம். அதன் பின்பு, அந்த வேருக்கு தீப, தூப ஆராதனை காட்டி, தீபம் ஏற்றி வைத்து பூஜையை நிறைவு செய்துகொள்ள வேண்டும்.

By admin