நிறைய பேருக்கு சப்பாத்தி செய்ய தெரியும். ஆனால், சப்பாத்தி உப்பி வராது. சப்பாத்தி என்றாலே லேயர் லேயராக வர வேண்டும். அதாவது சப்பாத்தி ஊப்பும் போது கீழே ஒரு லேயர், மேலே ஒரு லேயர் கட்டாயம் இருக்க வேண்டும். இப்படி ஒரு சூப்பர் சப்பாத்தியை உங்கள் வீட்டிலும் உங்கள் கையாலேயும் சுலபமாக செய்து விட முடியும். அது எப்படி என்பதைப் பற்றித் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இதற்கு அந்த மாவை மட்டும் தான் பயன்படுத்த வேண்டும், இந்த மாவை மட்டும் தான் பயன்படுத்த வேண்டும், என்ற எந்த கட்டுப்பாடும் கிடையாது. கடையிலிருந்து வாங்கும் ஆட்டா மாவாக இருந்தாலும் சரி, நீங்கள் வீட்டில் அரைத்து வைத்திருக்கும் கோதுமையை மாவாக இருந்தாலும் சரி, அந்த மாவில் இத ட்ரை பண்ணி பாருங்க! இந்த பதிவை பற்றிய முழு விவரமும், வீடியோ பதிவும் அதில் அடங்கி உள்ள குறிப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

முதலில் 1 கப் அளவு கோதுமை மாவு எடுத்துக்கொண்டால், 1/2 கப் அளவு தண்ணீர் ஊற்ற வேண்டும் என்பது தான் சரியான அளவு. ஒரு அகலமான பாத்திரத்தில் 1 – கப் அளவு (100) கோதுமை மாவு சேர்த்துக் கொள்ள வேண்டும். தேவையான அளவு உப்பை போட்டு நன்றாக கலந்து விட்டு, அதன் பின்பு 1/2 கப் அளவு தண்ணீரை ஊற்றி நன்றாக பிசய வேண்டும். (தண்ணீர் குறைந்தாலும் சப்பாத்தி உப்பி வராது. தண்ணீரை நிறைய உற்றி விட்டாலும் சப்பாத்தியை திரட்ட முடியாது. ஆரம்பத்தில் நீங்கள் பிசையும் போது, கை பிசுபிசுப்புத் தன்மையோடு தான் இருக்கும் பிசைய பிசைய சரியாகிவிடும்.)

மாவை நன்றாக பிசைந்து அதன் பின்பு, அந்த மாவின் மேல் பக்கத்தில் ஒரு ஸ்பூன் அளவு எண்ணெயை ஊற்றி தடவி, ஒரு மனப் பலகையின் மீது வைத்து, உங்களது விரல்களை வைத்து உருட்டி உருட்டி, அழுத்தி 10 நிமிடங்கள் வரை நன்றாக பிசைய வேண்டும். மாவை தொடும்போது சாஃப்டாக இருக்கும் அளவிற்கு வரவேண்டும்.

நீங்கள் மாவை உருட்டும் போதே இரண்டு லேயர் உங்களுக்கு கிடைத்துவிடும். இப்படி உருட்டிய உருண்டைகளை, சப்பாத்தி பலகையில் மீது வைத்து, லேசாக மாவை தூவி, அழுத்தம் கொடுக்காமல் தான் தேய்க வேண்டும். ரொம்பவும் அழுத்தம் கொடுத்தால், சப்பாத்தி உப்பி வராது. ரொம்பவும் மெல்லிசாகவும் தேய்க்க கூடாது. ரொம்பவும் தடிமனாகவும் தேய்க்கக்கூடாது. உப்பி வர சிரமம் இருக்கும்.
முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin