சமையல்கட்டில் பணம் சேர்த்து வைக்கும் பழக்கம் இன்று அல்ல நம் முன்னோர்கள் காலத்தில் இருந்தே பெண்கள் கடைப்பிடித்து வரும் ஒரு விஷயமாக கருதப்படுகிறது. மகாலட்சுமி, அன்னபூரணி ஆகியோர் சமையல்கட்டில் வாசம் செய்வதாக ஐதீகம் ஒன்று உண்டு. அதனால் தான் மற்ற அறைகளை காட்டிலும் சமையலறையில் பூஜை அறையும் இடம் பத்தாத பொழுது சேர்த்து வைக்கப்படுகிறது. இந்த அறையில் சேர்த்து வைக்கும் பணமானது பன்மடங்கு பெருகும் என்பது நம்பிக்கை. ஆனால் இதில் சேர்க்கப்படும் பணத்தை எப்படி சேர்க்க வேண்டும்? என்பதில் சூட்சுமம் உண்டு! அதைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம், வாருங்கள் பதிவிற்குள் போகலாம். இந்த பதிவை பற்றிய முழு விவரமும், வீடியோ பதிவும் அதில் அடங்கி உள்ள குறிப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பணத்தை கண்ட இடங்களில் போட்டு வைப்பது என்பது தரித்திரத்தை ஏற்படுத்தும் என்பார்கள் ஆனால் சமையல்கட்டில் நீங்கள் எங்கு பணத்தை போட்டு வைத்தாலும் அது தரித்திரத்தை உண்டாகாது மேலும் மேலும் பெருக வைக்கும். குறிப்பாக பெண்கள் அஞ்சறைப் பெட்டியில் சேர்த்து வைக்கும் பணமானது அதிகரித்துக் கொண்டே செல்லும். மேலும் அந்த பணம் ஆனது தகுந்த சமயத்தில் உதவும் என்பது தான் வியத்தகு விஷயமாக அமையும். இதற்கு முக்கிய காரணம் என்ன தெரியுமா? அந்த பணத்தை யாருக்கும் தெரியாமல் மறைத்து வைத்து சேர்க்கப்படுகிறது. சேர்த்து வைக்கும் அவர்களுக்கே எவ்வளவு இருக்கிறது? என்பது கூட தெரியாது. இப்படி மறைத்து வைத்து எவ்வளவு இருக்கிறது என்று தெரியாத அளவிற்கு சேர்த்து வைக்கும் பணமானது மென்மேலும் பெருகுவதாக தாந்திரீகம் உண்டு. இந்த அடிப்படையில் சமையல்கட்டில் பருப்பு வைக்கும் இடங்களில் பணத்தை சேர்த்து வைத்தால் பணம் குறையாமல் சேர்ந்து கொண்டே இருக்கும்.

அந்த பணத்தை நீங்களே மறந்து போய் விடுவீர்கள்! என்றாவது ஒரு நாள் உங்களுக்கு தேவையான சமயத்தில் அந்த பணமானது உங்களுக்கு கை கொடுத்து உதவும் வகையில் அற்புத நிகழ்வுகள் நடக்கும். பருப்பு வகைகளில் துவரம் பருப்பு மிகவும் மகத்துவமானது. துவரம் பருப்பை வைக்கும் இடத்தில் பணத்தையும் சேர்த்து மறைத்து வைத்தால் பணமானது மென்மேலும் பெருகுவதாக நம்பப்பட்டு வருகிறது.

ஆடம்பர செலவுகளை செய்வது பெண்களாக இருந்தாலும், அவர்களுக்கு எப்படி பணத்தை சேமிக்க வேண்டும் என்கிற சூட்சுமமும் தெரிந்திருக்கும். தேவையான சமயத்தில் இப்படி மறைத்து வைத்து சேமிக்கும் பணமானது உதவி செய்யும் பொழுது நம்மை நாமே நினைத்து பெருமைப்பட்டுக் கொள்வோம். எனவே உங்களுக்கு கிடைக்கும் பணத்தை எல்லாம் சமையல்கட்டில் இருக்கும் பருப்பு டப்பாக்களில் போட்டு வையுங்கள். பருப்பு என்று இல்லை எந்த இடத்தில் நீங்கள் வைத்தாலும் சமையலறையில் வைக்கும் பணமானது மென்மேலும் பெருகும் என்பது தான் நம்பிக்கை எனவே பணத்தை சேமிக்க நினைப்பவர்களுக்கு இது ஒரு நல்ல வழியாக இருக்கும்.

By admin