நமது உடலில் உள்ள ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்தால் ஏற்படும் விளைவே சர்க்கரை நோய் ஆகும். டைப் 2 சர்க்கரை நோய் உள்ளவர்கள், உணவு பழக்கத்தின் மூலமாகவே எளிதில் சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க முடியும். சர்க்கரை நோயில் அறிகுறிகள் மற்றும் அதை கட்டுப்படுத்தும் சித்த மருத்துவ குறிப்புக்கள் பற்றி பார்ப்போம் வாருங்கள். இந்த பதிவை பற்றிய முழு விவரமும், வீடியோ பதிவும் அதில் அடங்கி உள்ள குறிப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்பட்டால் அது சர்க்கரை நோய்க்கான ஒரு வகை அறிகுறியாக கூட இருக்கலாம். அதே போல அடிக்கடி தாகம் எடுத்தாலும் அதுவும் சர்க்கரை நோயின் அறுகுறியாகவே பார்க்கப்படுகிறது. கண் பார்வை மங்களாவது, உடல் எடை குறைவது, அடிக்கடி உடல் சோர்வு ஏற்படுவது, உடலில் ஏற்படும் காயங்கள் குணமாக அதிக நாட்கள் எடுத்துக்கொள்வது போன்ற பல அறிகுறிகளை வைத்து சர்க்கரை நோய் இருப்பதை உணரலாம். ஒவ்வொருவருக்கும் இதில் சில அறிகுறிகளோ, பல அறிகுறிகளோ அல்லது வேறு சில அறிகுறிகளோ கூட இருக்கலாம். ஆகையால் சர்க்கரை நோய் இருப்பது போல உணர்ந்தால் உடனே பரிசோதனை செய்துகொள்வது நல்லது.

பழங்கள் மூலமும் சர்க்கரை நோயை கட்டுப்படுத்த முடியும். சர்க்கரை நோயாளிகள் சாப்பிட வேண்டிய பழங்கள் – எலுமிச்சை, சாத்துக்குடி, ஆரஞ்சு. இந்த பழங்களில் சிட்ரஸ் அமிலம் இருக்கிறது. அதோடு இதில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இதனை உண்பதால் சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும். அதோடு உடல் அசதியையும் இந்த பழங்கள் போக்கும்.

சக்கரை நோயை கட்டுப்படுத்தும் சக்தி வெந்தயத்திடம் உள்ளது. ஆகையால் தினமும் வெந்தயத்தை பொடி செய்து அதை தண்ணீரிலோ அல்லது மோரிலோ கலந்து குடித்து வந்தால் சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும். பொடி செய்ய முடியாதவர்கள், ஒரு ஸ்பூன் வெந்தயத்தை ஒரு டம்ளர் தண்ணீரில் இரவு ஊறவைத்து காலையில் அந்த நீரையும் வெந்தயத்தையும் உண்ணலாம். நாவல் பழத்தின் கொட்டையை உண்பதன் மூலம் சர்க்கரை நோயை கட்டுப்படுத்த முடியும். நாவல் பழ கொட்டையை பொடியாக்கி வெந்நீரில் கலந்து தினமும் குடித்து வர சக்கரை நோய் கட்டுக்குள் வரும்.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin