கருஞ்சீரகத்தை, ஆங்கிலத்தில் பென்னல் பிளவர் என்று அழைக்கிறோம். பிளாக் காரவே நட்மக் பிளவர், ரோமன் கொரியாண்டர் என அவற்றின் சுவைகளை வைத்து பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகின்றன. கருஞ்சீரகம், பல்லாயிரம் ஆண்டுகளாக மருத்துவத்தில் முக்கிய பங்காற்றி வருகிறது. கருஞ்சீரகத்தை, வறுத்தோ அல்லது வறுக்காமலேயா நாம் நம் உணவுகளில் பயன்படுத்தி வருகிறோம். இந்த பதிவை பற்றிய முழு விவரமும், வீடியோ பதிவும் அதில் அடங்கி உள்ள குறிப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கருஞ்சீரகத்தில், நார்ச்சத்துக்கள்,அமினோ அமிலங்கள், இரும்புச்சத்து, சோடியம், கால்சியம் மற்றும் பொட்டாசியம் அதிகளவில் இருப்பதால், அது ஆற்றல் மையமாக விளங்கி வருகிறது. இதுமட்டுமல்லாது,கருஞ்சீரகத்தில், வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் பி 12, நியாசின், வைட்டமின் சி உள்ளிட்ட சத்துக்கள் அதிகளவில் உள்ளன. கருஞ்சீரக எண்ணெயில், அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள், வைட்டமின்கள், மினரல்கள் உள்ளன. கருஞ்சீரக எண்ணெயில், 17 சதவீத புரதமும், 26 சதவீதம் கார்போஹைட்ரேட்டும் மற்றும் 57 சதவீதம் தாவர எண்ணெய்களும் உள்ளன.

கருஞ்சீரகத்தை தேன் கலந்து சாப்பிட்டு வந்தால், அது நம் நினைவுத்திறனை அதிகரிக்க உதவுகிறது. வெறும் வயிற்றில் இதனை தினசரி உண்டுவந்தால், மூளையின் செயல்பாடு சிறந்த விதத்தில் இருக்கும். வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவுத்திறன் குறைவுக்கு இது சரியான தீர்வாக அமையும். கருஞ்சீரகத்தை, புதினா இலைகள் சேர்த்து பயன்படுத்தி வந்தால், அது அல்சைமர் போன்ற நரம்பு மண்டல பாதிப்புகளுக்கான சிறந்த தீர்வாக அமையும் என்று ஆயுர்வேத மருத்துவத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருஞ்சீரக விதைகளில், ஆன்டி – இன்பிளமேட்டரி பண்புகள் உள்ளதால், உடலில் ஏற்படும் வீக்கங்களை குறைக்க உதவுகிறது. கருஞ்சீரக எண்ணெயை, கை, கால் மூட்டுகளில் தடவுவதன் மூலம், நல்ல பலனை பெறலாம். உடலில் ஏற்படும் வீக்கங்களை குறைக்க, கருஞ்சீரக எண்ணெயை பயன்படுத்துமாறு, ஆயுர்வேத மருத்துவத்தில் பரிந்துரைக்கப்படுகிறது. கருஞ்சீரக எண்ணெய், நமது உடலின் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைப்பதோடு மட்டுமல்லாது, ரத்த அழுத்த மாறுபாடு ஏற்படாவண்ணம் பாதுகாக்கிறது. உயர் ரத்த அழுத்தம் கொண்டவர்கள், வெதுவெதுப்பான நீரில், கருஞ்சீரக எண்ணெயை கலந்து குடித்தால் நல்ல பலன் கிடைக்கும்.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin