கடலை மிட்டாய் என்பது வேர்க்கடலை மற்றும் வெல்லம் ஆகிய இரண்டு பொருள்களி கலவை. இவை இரண்டுமே அற்புதமான நன்மைகளை கொண்டவை இதனோடு ஏலக்காயும் அடங்கும். கடலை மிட்டாய் ஆரோக்கியமான கொழுப்பு மற்றும் உயர்தர புதரம் நிறைந்த மூலமாகும். இது அதிக அளவு கலோரிகளை கொண்டிருக்கின்றன. மேலும் அவை பொதுவான ஒவ்வாமையாக இருக்கின்றன. பச்சை வேர்க்கடலையில் இருக்கும் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் அவை வறுக்கப்படும் போது கொல்லப்படுகின்றன. அதே நேரம் இதில் இருக்கும் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் இழப்பதை உற்தி செய்ய பச்சைக்கடலையை வாங்கி வீட்டிலேயே வறுக்கலாம். இந்த பதிவை பற்றிய முழு விவரமும், வீடியோ பதிவும் அதில் அடங்கி உள்ள குறிப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

எடை மேலாண்மை- வேர்க்கடலை கொழுப்பு மற்றும் கலோரிகளின் சிறந்த ஆதாரமாக இருந்தாலும் எடை அதிகரிப்புகு அது பலனளிக்காது. இது சிறந்த எடையை பராமரிக்கவும் உடல் பருமன் ஏற்படுவதை தடுக்கவும் உதவும். வெவ்வேறு சிற்றுண்டிகளுடன் ஒப்பிடும் போது உணவில் வேர்க்கடலையை சேர்ப்பது நீண்ட நேரம் திருப்தியாக உணர வைக்கும்.

கலோரிகளை எரிக்கும் வேகத்தை அதிகரிக்கும். மோனோசாச்சுரேட்டர் கொழுப்புகள் புரதத்தின் அதிக உள்ளடக்கம் இதற்கு காரணமாக இருக்கலாம். இதில் இருக்கும் நார்ச்சத்து எடை அதிகரிப்பதற்கான வாய்ப்புகளை குறைக்கிறது. இதில் காப்பர், மெக்னீசியம், நியாசின் மற்றும் ஆக்ஸிஜனேற்றம் போன்ற பல இதய ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் கொண்டிருப்பதால் இது இரும்பு உறிஞ்சுதலுக்கு பங்களிக்கிறது. உடல் முழுவதும் ஆக்ஸிஜனை கொண்டு செல்ல தேவையான சிவப்பு இரத்த அணுக்களை உருவாக்குகிறது.

இது இரத்த நாளங்கள், ஆரோக்கியமான எலும்புகள் நரம்புகள் மற்றும் நோய் எதிர்ப்பு செயல்பாட்டை வலுப்படுத்த உதவுகிறது. உடலில் போதுமான தாமிரம் இதய அபாயத்தை குறைக்கிறது. உடலில் 300க்கும் மேற்பட்ட நொதி எதிர்வினைகளில் மெக்னீசியம் முக்கிய பங்கு வகிக்கிறது. இது இரத்த அழுத்தத்தையும் சீராக்க உதவுகிறது. மெக்னீசியம் குறைபாடு இதய பிரச்சனைகளுக்கு பங்களிக்க்கும்.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin