சாதரணமாக பனிக்காலத்தில் நம் உதடு காய்ந்து வெடிப்பு ஏற்பட ஆரம்பிக்கும். உதடுகள் காயக்காய நாம் அதனை பற்களால் கடித்து மேலும் பாதிப்புகளை உண்டு பண்ணி விடுவோம். இதனால் வலியும், எரிச்சலும் உதடுகளில் ஏற்பட ஆரம்பிக்கும். இதனை தவிர்க்க பனிக்காலங்களில் பயன்படுத்தப்படும் ஒரு பொருள் தான் இந்த பொருள். இந்த பொருளை வெறும் உதடு வெடிப்பிற்கு மட்டும் பயன்படுத்தாமல் வேறு எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்? என்பதை தெரிந்து கொண்டால் நமக்கு ஆச்சரியமாக இருக்கும். அது என்ன பொருள்? அதன் மூலம் கிடைக்கக்கூடிய பயன்கள் என்னென்ன? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம். இந்த பதிவை பற்றிய முழு விவரமும், வீடியோ பதிவும் அதில் அடங்கி உள்ள குறிப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பனிக்காலத்தில் உதடு வெடிப்பிற்கு பயன்படுத்தப்படும் அந்த பொருள் வாஸ்லின் எனப்படும் ஒரு மாய்ஸ்சரைசர் லோசன் ஆகும். இது உதடு மட்டும் அல்லாமல் முகத்தில் இருக்கும் வறட்சியை நீக்கவும், வெயிலின் தாக்கம் நம் சருமத்தை பாதிக்காமல் இருக்கவும் கொஞ்சமாக வெயிலில் போகும் பொழுது வாஸ்லினை தடவி கொண்டு செல்லலாம். கை விரல் மோதிரம் மற்றும் காதில் அணியும் தோடு ஆகியவை நன்கு பதிந்து வெளியில் எடுக்க முடியாமல் புண்ணாகி அவதிபடும் பொழுது சிறிதளவு வாஸ்லினை தடவி விட்டு பின்னர் எடுத்து பார்க்கலாம் வலி இல்லாமல் எளிதாக வந்துவிடும்.

நாம் பயன்படுத்தும் மணி பர்ஸ், ஹேண்ட் பேக், ஸ்கூல் பேக், அல்லது வேறு ஏதேனும் லெதர் பொருட்கள் எதுவாக இருந்தாலும் அதில் ஜிப்பை சரியாக போட முடியாவிட்டால் கொஞ்சம் வாஸ்லினை தடவி விட்டு பின்னர் போட்டு பார்க்கலாம். பொதுவாக இதற்கு தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவார்கள். ஆனால் எண்ணெயை விட இது நல்ல பலனை கொடுக்கும் என்பதால் இது சிறந்த டிப்ஸ் ஆக இருக்கும்.

பெண்கள் மேக்கப் போடுவதை விட அதை கலைக்கும் பொழுது மிகவும் சிரமப்படுவார்கள். அதிகப்படியான மேக்கப்பை கலைக்க பிரத்தியேகமாக விலை உயர்ந்த ரிமூவர்கள் விற்கப்படுகின்றன. ஆனால் அதையெல்லாம் காசு கொடுத்து வாங்க வேண்டிய அவசியமே இல்லை. கொஞ்சம் வாஸ்லினை தடவி டிஷ்யூ அல்லது காட்டன் வைத்து துடைத்தால் எத்தகைய மேக்கப் சாயமும் எளிதாக கலைந்து விடும். சருமத்திற்கும் பாதிப்பு ஏற்படாமல் இருக்கும். ஐ ஷேடோ, ஐ லைனர், லிப்ஸ்டிக் போன்ற சாயங்களை கலைக்க இது நல்ல டிப்ஸ் ஆக இருக்கும்.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin