துணி துவைக்கும் பொழுது பொதுவாக கவனமாக பார்த்து துவைக்க வேண்டும். ஒரு துணியுடன் மற்ற துணிகளை சேர்த்து துவைக்கும் பொழுது அதில் சாயம் போகும் துணி ஏதாவது இருக்கிறதா? என்பதை கவனிக்க வேண்டும். கைகளில் துவைப்பவர்கள் தனித்தனியாக ஊற வைத்து துவைத்து விடலாம். ஆனால் வாஷிங் மெஷின் கொண்டு துவைப்பவர்களுக்கு இது போல பார்த்து கவனமாக எல்லா சமயங்களிலும் துவைக்க முடியாது. எனவே தெரியாமல் இது போல துவைக்கும் போது ஏற்படக் கூடிய சாயம் நீங்க செய்யக்கூடிய எளிய விஷயம் என்ன? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் நீங்கள் தெரிந்து கொள்ள இருக்கிறீர்கள். இந்த பதிவை பற்றிய முழு விவரமும், வீடியோ பதிவும் அதில் அடங்கி உள்ள குறிப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வெள்ளைத் துணியில் சாயம் ஏற்பட்டுவிட்டது என்றால் அதை காய வைக்கும் முன்பே இப்படி செய்து விட்டால் வெள்ளைத் துணியில் ஏற்பட்ட சாயம் கொஞ்சம் கூட இல்லாமல் சுலபமாக நீக்கி விடலாம். ஒரு அரை பக்கெட் அளவிற்கு வெதுவெதுப்பான தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள். இளஞ்சூட்டில் இருந்தால் போதும். அதில் ஒரு ஸ்பூன் அளவுக்கு ப்ளீச்சிங் பவுடர் சேர்த்துக் கொள்ளுங்கள். கட்டிகள் எதுவும் இல்லாமல் நன்கு கரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதில் அரை மூடி எலுமிச்சை பழத்தை பிழிந்து விடுங்கள். பிறகு சாயம் போன துணியை அதில் 5 நிமிடம் ஊற வைத்து பின்னர் சாயம் போன இடத்தை லேசாக கசக்கி கொடுங்கள்.

கைகளைக் கொண்டு கசக்கினால் முழுமையாக நீங்கவில்லை என்றால் நீங்கள் பிரஸ் பயன்படுத்திக் கொள்ளலாம். இது ரொம்பவே நல்ல ரிசல்டை கொடுக்கும். இதுவே கலர் துணிமணிகள் என்றால் ப்ளீச்சிங் பவுடரை அதிகம் சேர்க்க வேண்டாம். கால் ஸ்பூன் அளவிற்கு சேர்த்து கரைத்துக் கொள்ளுங்கள். இதே போல அரை மூடி எலுமிச்சையைப் பிழிந்து அதனுடன் துணி துவைக்கும் லிக்விட் கொஞ்சம் சேர்த்து 5 நிமிடம் ஊற வைத்து லேசாக கைகளால் கசக்கினால் எப்பேர்பட்ட கரையும் சுலபமாக நீங்கும்.

இந்த முறை உங்களுக்கு பயன் அளிக்கவில்லை என்றால் அல்லது பிளீச்சிங் பவுடருக்கு பதிலாக வேறு ஏதாவது ஒன்றை பயன்படுத்த வேண்டும் என்று நினைத்தால் நீங்கள் ஈனோ பயன்படுத்தலாம். அசிடிட்டிக்கு பயன்படுத்தப்படும் இந்த ஈனோ துணிகளில் இருக்கும் கரையையும் சுலபமாக நீக்கிவிடும் சக்தி கொண்டுள்ளது.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin