சிக்கன் மட்டன் சுவைகளை மிஞ்சும் அளவிற்கு கல்யாண வீட்டு கருணை கிழங்கு வருவல் !!செய்வது எப்படி ??

வணக்கம் நண்பர்களே கல்யாண வீட்டு கருணைக்கிழங்கு செய்வது பற்றி பார்க்கலாம் முதலில் கால் கிலோ கருணைக்கிழங்கு எடுத்துக்கொள்ள வேண்டும் அதனை நன்கு தோல்களை சீவி எடுத்து தேவையான அளவில் அறிந்து கொள்ள வேண்டும் அதை குக்கரில் அல்லது ஒரு பாத்திரத்தில் வைத்து கருணைக்கிழங்கு முழுகும் அளவில் தண்ணீரை ஊற்றிக் கொள்ளவும் அதில் மஞ்சள்தூள் தேவையான அளவு உப்பும் சேர்த்துக் கொள்ள வேண்டும் அதை அதிகமாகவே வேகவிடாமல் குக்கர் என்றால் இரண்டு விசில் களில் எடுத்துவிட வேண்டும் பாத்திரம் என்றால் நீங்கள் அழுத்தம் பதத்திற்கு வேக வைத்துக் கொள்ள வேண்டும்.

அதன்பின்பு வானல் அல்லது பேனில் மூன்று அல்லது நான்கு கரண்டி எண்ணெய் எடுத்துக் கொள்ள வேண்டும் அதன் பின் வேக வைத்த கருணைக்கிழங்கை அதில் வைத்து நன்கு வதக்கி எடுத்து வைத்து விட வேண்டும் பின்னர் காயவைத்த எண்ணெயில் கடுகு சிறிதளவு பொரியும் வரை போட்டுவிட்டு அதன் பின்பு ஒரு பெரிய வெங்காயத்தில் பாதி அளவு மட்டும் பொடியாக நறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும் அதேபோல் ஒரு சராசரியான அளவு மிக்க தக்காளி ஒன்றை நறுக்கிக் கொள்ளவேண்டும் அதனுடன் சிறிது கருவேப்பிலை மட்டும் சேர்த்து எண்ணெயில் போட்டு நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும் பின்னர் முழு வெங்காயத்தை எடுத்து வைக்கப்பட்ட பாதி வெங்காயத்தையும் 5 பல்லு பூண்டு அரை பச்சைமிளகாய் கருவேப்பிலை அரை டீஸ்பூன் சோம்பு அரை டீஸ்பூன் மிளகு ஆகியவற்றைச் சேர்த்து மிக்ஸி ஜாரில் வைத்து நல்ல பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

அரைக்கும் பொழுது தண்ணீர் சேர்க்கக் கூடாது இப்பொழுது அரைத்த மசாலாவை வதங்கிக்கொண்டிருந்த வெங்காயம் தக்காளி அதனுடன் சேர்த்து ஒன்றரை டீஸ்பூன் மிளகாய் பொடி சேர்த்து 2 டீஸ்பூன் தண்ணீரையும் சேர்த்து நன்றாக 5 நிமிடம் வதக்கிக் கொள்ள வேண்டும் அதனுடன் நாம் ஏற்கனவே வேக வைத்து வதக்கி வைத்துள்ள கருணைக்கிழங்கை சேர்த்து ஐந்து நிமிடம் மிதமான சூட்டில் வறுக்க வேண்டும் தேவைப்பட்டால் எண்ணெய் சேர்த்துக் கொள்ளலாம் நன்கு வதக்கியவுடன் ஒரு இரண்டு நிமிடம் மேலே ஒரு தட்டு அல்லது ஏதாவது ஒரு பாத்திரம் வைத்து மூடி விட வேண்டும் அவ்வளவுதான் சூடான கல்யாண வீட்டு கருணைக்கிழங்கு வறுவல் ரெடி நீங்கள் இதை எல்லா வித உணவிற்கும் தொட்டு கொள்ளலாம். இதை நண்பர்களுக்கும் பகிருங்கள்.

தேவைப்படும் பொருட்கள் கருணைக்கிழங்கு தேவையான அளவு மஞ்சள்தூள் உப்பு 4 கரண்டி சமையல் எண்ணெய் கடுகு உளுத்தம் பருப்பு ஒரு பெரிய வெங்காயம் ஒரு சராசரி அளவுள்ள தக்காளி சிறிது கருவேப்பிலை 5 பல்லு பூண்டு பச்சை மிளகாய் சோம்பு மற்றும் மிளகு அரை டீஸ்பூன்
2 டீஸ்பூன் மிளகாய் பொடி அவ்வளவுதாங்க மிக எளிதான முறையில் சுவையான சிக்கன் மட்டன் க்கு இணையான கல்யாண கருணைக்கிழங்கு தயார் ஒருமுறை இதை செய்து பாருங்கள் பின்னர் மீண்டும் மீண்டும் வீட்டில் அனைவரும் இதைச் செய்யச் சொல்வார்கள்.