உடல் கழிவுகளை வெளியேற்று சிறுநீரகம் சீராக தடங்கலில்லாமல் செயல்படும் வரை உடல் ஆரோக்கியத்திலும் குறைபாடு இல்லை. ஆனால் சிறுநீரகங்களில் கனமான தாது உப்புகள் தேங்கி அங்கேயே நிற்பதை சிறுநீரக கற்கள் என்று அழைக்கிறார்கள். இந்த கற்கள் உண்டாக்கும் வலியும், உபாதையும் தீவிரமானவை. இதற்கு மருந்துகள் எடுத்துகொள்ளும் போது மேலும் சிறுநீரகத்தில் கற்கள் உருவாகாமல் இருக்க உடலை அதிக நீரேற்றமாக வைத்திருக்கவும் வேண்டும். இந்த பதிவை பற்றிய முழு விவரமும், வீடியோ பதிவும் அதில் அடங்கி உள்ள குறிப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அப்போதுதான் உடலில் இருக்கும் நச்சுக்கள் தாராளமாக வெளியேறுவதோடு சிறுநீர் கற்களையும் நகர்த்த உதவும். அப்படி நீங்கள் எடுத்துகொள்ள வேண்டிய பொருள்களை தான் பார்க்கபோகிறோம். மிகச்சிறிய அளவில் இருக்கும் சிறுநீரக கற்கள் என்றால் அவை வெளியேறுவதற்கான வாய்ப்பு பெருமளவு உண்டு. அதே நேரம் அதிக வலி மிகுந்த சிறுநீரக கற்களாக இருந்தால் அதை இந்த வைத்தியத்தின் மூலம் வெளியேற்றிவிட முடியும் என்று நினைக்காமல் மருத்துவரின் அறிவுரையோடு இதை முயற்சிப்பது தான் பாதுகாப்பானது.

தண்ணீர் எப்போதும் அதிகமாக எடுத்துகொள்கிறேன் என்று சொல்பவர்கள் கூட வழக்கத்தை காட்டிலும் கூடுதலாக தண்ணீர் குடிக்க வேண்டும். சிறுநீரக கல் வெளியேறுவதை ஊக்குவிப்பதில் தண்ணீருக்கு அதிக பங்குண்டு. அதனால் வழக்கத்தை காட்டிலும் கூடுதலாக இதை முயற்சி செய்யுங்கள்.

அதற்காக மட்டுமே தண்ணீர் குடிக்க வேண்டியதில்லை. நீரிழப்பு என்பது சிறுநீரக கற்கள் கொண்டிருப்பவர்களுக்கு ஆபத்துகளை விளைவிக்கும். அதனால் அதிக நீரேற்றத்தோடு இருப்பது நல்லது. இல்லையெனில் இவையும் இணைந்து உபாதையை அதிகமாக்கும். சிறுநீரக கல் இருப்பது உறுதியானால் சிறுநீரகம் போகும் போது அதன் அடர்த்தியும் கவனிக்க வேண்டும். வெளிமஞ்சளாக இருந்தால் சரி. அடர் மஞ்சள் நிறமாக இருந்தால் அது சிறுநீர் இழப்பின் அறிகுறியாகவும் இருக்கலாம்.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin