நம்மையும் நம் வீட்டை சுற்றியும் நல்ல அதிர்வு அலைகள் மற்றும் கெட்ட அதிர்வலைகள் இரண்டுமே இருக்கும். நல்லது என்று ஒன்று இருக்கும் பொழுது, கெட்டது என்ற ஒன்று இருக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. இந்த கெட்ட அதிர்வலைகளை வீட்டிற்குள் நுழைய விடாமல் தடுக்கும் சக்தி இந்த அற்புத வகை புல் ஒன்றிற்கு உண்டு. அது என்ன? எப்படி அதை பயன்படுத்துவது? என்பதை தெரிந்து கொள்வதற்கு தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள். இந்த பதிவை பற்றிய முழு விவரமும், வீடியோ பதிவும் அதில் அடங்கி உள்ள குறிப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அனைத்து விதமான ஆன்மீக பரிகாரங்கள் செய்வதற்கும் இந்த புல் வகையானது பயன்படுத்தப்படுகிறது. இதற்கு ‘தர்பை’ என்கிற பெயருண்டு. இந்த தர்ப்பைப் புல் மிகவும் மகத்துவமான சக்திகளை தன்னுள்ளே கொண்டுள்ளது. சுப காரியங்கள் செய்வதற்கும், பூஜை, புனஸ்காரங்கள் செய்வதற்கும், பித்ரு பரிகாரங்கள் செய்வதற்கும் கூட தர்பைப் புல்லானது பயன்படுத்தப்படுகிறது. தர்பை புல் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவரின் அம்சமாக பார்க்கப்படுகின்றது. இதனை நம் வீட்டில் வைத்திருந்தால் வீட்டிலிருக்கும் எந்த ஒரு துஷ்ட சக்தியும் நம்மை அண்டுவதில்லை. தீய சக்திகள் தலை தெறிக்க வெளியே ஓடியே சென்று விடுமாம். இத்தகைய பேராற்றல் கொண்ட தர்ப்பைப்புல் விலையிலும் மலிவானது தான். அனைத்து பூஜை பொருட்கள் விற்கும் கடைகளிலும் கிடைக்கப் பெறுகின்றது மற்றும் நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும்.

இதனை 108 என்ற எண்ணிக்கையில் சரிசமமான அளவில் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். ஒன்றாக கோர்த்து 8 இடங்களில் முடிச்சுகள் போட வேண்டும். தர்ப்பைப் புல்லை அடி மற்றும் நுனி பகுதிகள் இருக்குமாறு பார்த்து வங்க வேண்டும். ஒன்றாக சேர்த்து எட்டு இடங்களில் 8 முடிச்சுகள் போட்டு அதனை வீட்டின் தலை வாசல் பகுதிக்கு வெளியே மேல் பக்கமாக கட்டி விட வேண்டும். தர்ப்பைப்புல்லின் அடி பாகம் தெற்கு நோக்கியும், நுனிப்பாகம் வடக்கு திசையை நோக்கியும் வைப்பது அவசியமாகும். கெட்ட அதிர்வலைகளை நீக்குவதற்கு வாஸ்து சாஸ்திரம் கூறும் மிகச் சிறந்த பரிகாரமாக இந்த பரிகாரம் பார்க்கப்படுகின்றது. தர்ப்பைப் புல்லை கட்டி தொங்க விடும் பொழுது அந்த இடத்தில் துஷ்ட சக்திகள் எதுவும் பக்கத்தில் கூட வரமுடியாது. தர்ப்பையில் வீற்றிருக்கும் மும்மூர்த்திகளும் உங்களின் வீட்டிற்க்கு காவல் தெய்வமாக இருந்து பாதுகாப்பு அளிப்பார்கள்.

தியானம் செய்பவர்கள் தர்ப்பைப்புல் கொண்ட விரிப்புகளில் உட்கார்ந்து தியானம் செய்யும் பொழுது விரைவாகவே தியான நிலைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள். உடலில் இருக்கும் பல்வேறு நோய்கள் தீர தர்பை புல் பாய் விரித்து கொண்டு தினமும் இரவு தூங்கி பாருங்கள். இது போல பழைய பழக்க வழக்கங்களை நாம் மறக்காமல் கடைபிடித்து வந்தாலே நம்முடைய வாழ்வும் சிறப்படையும் என்பதை கூறி இப்பதிவை நிறைவு செய்வோம்.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin