காலை நேரம் டிபனுக்கு சிறந்த உணவு முட்டை. அந்த முட்டையில் வழக்கமாக செய்யும் ஆம்லெட், பொரியல் என்று ஒரே மாதிரியாக இல்லாமல் வித்தியாசமாக பணியாரம் செய்தால் எப்படி இருக்கும். இந்த பதிவை பற்றிய முழு விவரமும், வீடியோ பதிவும் அதில் அடங்கி உள்ள குறிப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சின்ன வெங்காயம் – 1
பச்சை மிளகாய் – 2
கறிவேப்பிலை – 1 கொத்து
கடுகு – தாளிக்க
உளுத்தம்பருப்பு – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 2 ஸ்பூன்

முட்டையை ஒரு பாத்திரத்தில் ஊற்றி நன்கு அடித்துக்கொள்ள வேண்டும். அடித்த முட்டையை இட்லி மாவுடன் சேர்த்து நன்றாக கலக்கிக் கொள்ள வேண்டும். அதன் பின் கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு , நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை போட்டு வதக்கி மாவுடன் நன்றாக கலந்து கொள்ள வேண்டும். அதன் பிறகு கலவைக்கு ஏற்ப தேவையான அளவு உப்பு சேர்த்துக்கொள்ள வேண்டும்.

அதன் பின்னர் குழிப்பணியாரக்கல்லில் சிறிது எண்ணெய் ஊற்றி நன்றாக காய்ந்ததும் முட்டை கலந்த மாவுக்கலவையை ஒவ்வொரு குழியிலும் ஊற்ற வேண்டும். மாவு வெந்ததும் பிரட்டி எடுத்தால் சுவையான முட்டைப் பணியாரம் தயார்.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin