நமக்கு பணக்கஷ்டம் வராமல் இருக்க வேண்டுமென்றால், அடிக்கடி அதிர்ஷ்டம் தரக்கூடிய சின்ன சின்ன விஷயங்களை செய்து பார்ப்பதில் ஒன்றும் தவறு இல்லை. அப்படி ஒரு சின்ன பரிகாரத்தை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இதில் எந்த ஒரு மாய மந்திர வித்தைகளும் கிடையாது. உண்மையிலேயே உங்களுக்கு அதிர்ஷ்டமானது தேடிவரும். சந்திர பகவானின் ஆசிர்வாதம் முழுமையாக உங்களுக்கு கிடைக்கப் போகின்றது. அதிர்ஷ்டமானது உங்களை தேடி வரப்போகின்றது. பொதுவாகவே பௌர்ணமி தினத்தில் குலதெய்வ பூஜை செய்தால் நமக்கு இரட்டிப்பு பலன் கிடைக்கும் என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒரு விஷயம். இந்த பதிவை பற்றிய முழு விவரமும், வீடியோ பதிவும் அதில் அடங்கி உள்ள குறிப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அந்தப் பௌர்ணமி தினத்தன்று, நம் கையில் இருக்கும் 1 ஐந்து ரூபாய் நாணயத்தை அதிர்ஷ்டமான நாணயமாக எப்படி மாற்ற போகின்றோம், என்ற ஒரு சுலபமான முறையை தான் இப்போது தெரிந்து கொள்ளப் போகின்றோம். உங்க பர்ஸ்ல இருக்க பணம் செலவாகாமல் அப்படியே இருக்கணும்னு நினைக்க முடியாது. ‘செலவான பணம், இரட்டிப்பாக திரும்பி வரணும்’. அப்படிதானே வேண்டுதல் வைக்க முடியும். என்றால் ஏனென்றால் செலவு செய்தால்தான் அது பணம். செலவு செய்வதற்காக தான் பணம். சரி பதிவுக்கு செல்லலாமா?

முதலில், பௌர்ணமி தினத்தன்று இரவு 7 மணிக்கு மேல், உங்கள் வீட்டு பூஜை அறையில் ஒரு தீபத்தை ஏற்றிவைத்து, குலதெய்வத்தை நன்றாக வேண்டிக்கொள்ளுங்கள். முதலில் ஒரு வெள்ளைக் காகிதத்தை எடுத்து அதில் ஸ்வஸ்திக் சின்னம் வரைய வேண்டும். குங்குமத்தை தண்ணீரில் கரைத்து, அதை ஒரு தீக்குச்சியால் தொட்டு, அல்லது புது தென்னங் குச்சியால் தொட்டோ ஒரு வெள்ளைப் பேப்பரில் ஸ்வஸ்திக் சின்னத்தை வரைந்து கொள்ளுங்கள். பேப்பரின் நான்கு முனைகளிலும் மஞ்சள் தடவிக் கொள்ளுங்கள். இந்தக் காகிதத்தை ஒரு தாம்பாளத் தட்டில் வைத்துக் கொள்ளுங்கள். காகிதமானது அப்படியே இருக்கட்டும்.

ஒரு ஐந்து ரூபாய் நாணயம் மட்டும் உங்கள் உள்ளங்கைகளில் இருக்க வேண்டும். இரு கைகளை கூப்பி வேண்டிக் கொள்ளும்போது, இரு உள்ளங்கைகளின் நடுவில் அந்த ஐந்து ரூபாய் நாணயத்தை வைத்துக்கொள்ளுங்கள். ‘உங்கள் கையில் வரக்கூடிய வருமானத்திற்கு வீண்விரயம் ஆகக்கூடாது. சுபச்செலவுகள் தான் ஆகவேண்டும். செலவு ஆகும் பணம் இரட்டிப்பாக மீண்டும் உங்கள் கைகளுக்கு வரவேண்டும்’. என்ற வேண்டுதலை குலதெய்வத்திடம் வேண்டிக் கொண்டு, அந்த ஐந்து ரூபாய் நாணயத்தை தயாராக இருக்கும் ஸ்வஸ்திக் சின்னம் வரையப்பட்ட பேப்பரின் மேல் வைத்து, இந்தத் தாம்பூலத் தட்டை அப்படியே மொட்டை மாடியிலோ அல்லது உங்கள் வீட்டு பால்கனியில் வைத்துவிடுங்கள். அதாவது சந்திர பகவானின் தரிசனம் இந்த ஐந்து ரூபாய்க்கு கிடைக்க வேண்டும். ஒரு ரூபாய் நாணயத்தை கூட இந்த பரிகாரத்திற்கு பயன்படுத்தலாம் தவறொன்றும் கிடையாது. நம்பிக்கை இருந்தால் நம்பிக்கையோடு முயற்சி செய்து பாருங்கள். சக்சஸ் ஆகி விட்டால் லாபம் தானே. நஷ்டம் என்று சொல்ல எதுவுமில்லை. பணம் சேர்வதற்கு சின்ன பரிகாரம் செய்வது பார்ப்பதில் தவறு ஒன்றும் கிடையாது என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

By admin