பரோட்டா எல்லோருக்கும் பிடித்த ஒரு உணவு என்றாலும், மதுரை புகழ் பன் பரோட்டாவை நீங்கள் சாப்பிட்டதுண்டா? இதற்கு நீங்கள் மதுரை செல்லவேண்டிய அவசியமில்லை. வீட்டிலேயே இதை எளிதில் செய்யலாம் வாங்க. முதலில் நீங்கள் மாவை கலந்து பிசைந்து கொள்ள வேண்டும். எனவே இதற்காக, 2 கப் மைதாவை 1 டீஸ்பூன் உப்பு மற்றும் 1 தேக்கரண்டி சர்க்கரையுடன் கலக்கவும். மாற்றாக, நீங்கள் மைதாவைப் பயன்படுத்த விரும்பவில்லை என்றால் கோதுமை மாவைப் பயன்படுத்தலாம். இந்த கலவையில் 1 முட்டை சேர்த்து மாவை நன்கு பிசையவும். இந்த பதிவை பற்றிய முழு விவரமும், வீடியோ பதிவும் அதில் அடங்கி உள்ள குறிப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பின்னர் 2 ஸ்பூன் பால் சேர்த்து நன்கு கலக்கவும். இப்போது இந்த கலவையில் தண்ணீரை தேவைகேற்ப சேர்த்து, மாவை மென்மையாகும் வரை பிசைந்து கொள்ளுங்கள். டிப் – நீங்கள் இந்த பரோட்டா மாவை மூன்று எளிய வழிகளில் மென்மையாக்கலாம் : உங்கள் கைகளைப் பயன்படுத்தி சிறிய இடைவெளியில் மாவை கைகளால் பன்ச் குடுங்கள் மாவு பந்தை தொடர்ந்து உங்கள் தவாவில் அடித்து மென்மையாக்குங்கள் அல்லது மாவு மென்மையாக்க ஒரு அம்மிக்கல் உரலை (சிறிய உரல் ) பயன்படுத்தி அதை மிதமாக குத்தவும். இப்போது அதில் சிறிது எண்ணெய் சேர்த்து இரண்டு மணி நேரம் மூடி வைக்கவும்.

அதன் பிறகு பிசைந்த மாவில் இருந்து ஒரு சிறிய பந்தை இழுத்து உருட்டவும். மாவிலிருந்து நடுத்தர அல்லது பெரிய அளவிலான பந்துகளை உருவாக்குவதைத் தொடருங்கள். பந்துகளுக்கு மேல் சிறிது எண்ணெய் தடவி மற்றொரு மணி நேரம் விட்டு விடுங்கள். இப்போது, பரோட்டா மாவை உருட்டப் போகும் கல்லில் சிறிது எண்ணெயை தடவவும். மெல்லியதாக வரும் வரை (கீழிருக்கும் கல் தெரியும் அளவுக்கு) அதை உருட்டிக் கொண்டே இருங்கள். இப்போது, ​​உருட்டப்பட்ட மாவை இரண்டு முறை உள்நோக்கி மடியுங்கள். உங்கள் ஆள்காட்டி விரலைப் பயன்படுத்தி, அதை சுற்றி மாவை உருட்டத் தொடங்குங்கள்.

பின்பு , ஒரு தவாவில் சிறிது எண்ணெய் தடவவும். மிதமான சூட்டில் , மாவை பொன்னிறமாக மாறும் வரை இருபுறமும் திருப்பி எடுக்கவும் இரு கைகளையும் பயன்படுத்தி பரோட்டாவை ( கை தட்டுவது போல் ) தட்டி விடவும். இதனால் பரோட்டா நல்ல பஞ்சுபோன்றதாகவும் மென்மையாகவும் மாறும். சுவையான மட்டன் கிரேவியுடன் சூடாக பரிமாறவும். நேரம் இருந்தால், மதுரை/ தேனீ /கம்பம் சென்றால், ஜிகாத்தாண்டாவை போல இந்த பன் பரோட்டாவையும் ருசித்து மகிழுங்கள்!

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin