உலகில் அதிகப்படியான மூலிகைச் செடிகள் உள்ளது,அந்த வகையில் சாலை மற்றும் வயல் பகுதிகளில் அதிகமாக வளரும் லன்டனா. இதனை தமிழில் உன்னிச் செடி என்று கூறுவர் ,அத்தை மருமகள் செடி என்றும் பெயர் உண்டு. கிராம பகுதிகளில் புதர் போல் படர்ந்து கிடக்கும்,வயல் பகுதிகளில் சுற்றி இருக்கும். இதற்கு காரணம் பூச்சிகள் அண்டாது .உண்ணிச் செடியில் அழகான சின்னச் சின்ன பூக்கள் மலர்ந்திருக்கும் அந்தப் பூக்கள் பல வண்ணங்களில் காணப்படும். உன்னிச் செடியின் பூர்வீகம் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா உன்னிச் செடியின் நன்மைகள் யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை. இந்த பதிவை பற்றிய முழு விவரமும், வீடியோ பதிவும் அதில் அடங்கி உள்ள குறிப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

உன்னிச் செடியின் இலை மற்றும் பூக்களில், நம் உடலுக்கு தேவையான சத்துகள் உள்ளது. உண்ணிச் செடி எல்லா சீசனிலும் வளரக்கூடியவை. உன்னிச் செடியை வீட்டின் நுழைவாயிலில் வைத்திருப்பர், இதன் நன்மையை தெரியாமல். உன்னிச் செடியை நுழை வாயிலில் வைப்பதால் கொசுக்கள் வீட்டுக்குள் வராது, ஏனென்றால் கொசுக்களுக்கு உன்னிச் செடியின் வாசனை பிடிக்காது. இதனால் கொசுக்கள் வீட்டு பக்கம் வராது.

உன்னிச் செடி கிடைக்க வில்லை என்றால், இதன் இலையை காயவைத்து பொடி செய்து நாட்டு மருந்து கடையில் வைத்திருப்பர். அந்த பொடியை வைத்து நெருப்பு வைத்தால் கொசுக்கள் வராது. உன்னிச் செடியின் புகை பிடிக்காதவர், உன்னிச் செடி சூரணமும் நாட்டு மருந்து கடையில் கிடைக்கும் அதனை ஏர் ஃப்ரெஷனர் தொங்க போடுவதன் மூலம் கொசு வருவதை தடுக்கலாம்.உன்னிச் செடியின் இலையை அரைத்து உடலில் உள்ள காயம், நாற்பட்ட புண் போன்று இடங்களில் பத்து போடலாம். சொறி, சிரங்கு, படை நீக்கவும் உண்ணிச்செடி உதவும். இதன் பூக்கள் இனிப்பாக உள்ளதால் டீ போட்டு குடிப்பதால் காச நோய் தீரும்,மேலும் நுரையீரல் பிரச்சனைகளுக்கும், நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும், உடல் இரத்த கொதிப்புக்கு நல்லது.

உன்னி இலையை அரைத்து தடவுவதால் மூட்டு வலியும் குணமாகும். மூலிகைச் செடிகளில் மிக முக்கியமாக கருதப்படும் இந்த உன்னிச் செடி உடலுக்கும் சுற்றுப்புறத்துக்கும் மிகவும் நல்லது.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin