தினமும் சட்னி அரைக்க கஷ்டமா இருக்கா ? அப்ப இத பண்ணுங்க.. தினமும் சட்னி அரைக்க கஷ்டமா இருக்குனு நினைக்கிறீங்களா அப்ப இத மாதிரி ஒரு பொடியை ரெடி பண்ணி வச்சிக்கோங்க தினமும் சட்னி அரைக்க தேவை இல்லை. தினமும் தோசை இட்லி சாப்பிடும் மக்கள் இத ட்ரை பண்ணி பயன் பெறலாம். மேலும் இது பற்றின முழு விவரம் இந்த பதிவில் கூறவுள்ளோம். முதலில் இந்த சண்டி போடி எப்படி தயாரிப்பது என்று பார்ப்போம். இந்த பதிவை பற்றிய முழு விவரமும், வீடியோ பதிவும் அதில் அடங்கி உள்ள குறிப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இதற்க்கு அரை கப் அளவுக்கு வேர்க்கடலை சேர்த்து கடாயில் வறுக்க வேண்டும் வறுபட்டவுடன், இதை தோளோடு சேர்க்கலாம் அனால் தோலுடன் சேர்த்தால் துவர்ப்பு சுவை வரும் அதனால் தோலை எடுத்து சேர்க்கவும். மேலும் ஒரு கப் அளவுக்கு போட்டு கடலை எடுத்து அதையும் வேர்க்கடலை வறுத்த மாதிரி வறுக்க வேண்டும். மேலும் அதனுடன் உளுத்தம் பருப்பு சேர்த்து முன்பு செய்த மாதிரியே வறுக்க வேண்டும். அதே கடையில் காய்ந்த மிளகாய் சேர்த்து அதனுடன் கல் உப்பு ஒரு அரை டீஸ்பூன் சேர்த்து அதையும் வருது எடுத்து கொள்ளவேண்டும்.

பின்பு அதே அளவுக்கு தேங்காய் துருவாக் எடுத்து முன்பு வறுத்த மாதிரியே வருது எடுத்துக்கொள்ளவேண்டும். அதனுடன் கருவேப்பிலை ஒரு கைப்பிடி, ஏழு எட்டு பல் பூண்டு தோல் எடுத்து அல்லது எடுக்காமல் சேர்த்து கொள்ளவேண்டும். இப்பொழுது நாம் அனைத்தையும் ரெடி பண்ணி விட்டோம்.

இதனை ஒரு மிஸ்சி ஜெரி போட்டு நன்கு அரைத்து தேடுது கொள்ள வேண்டும். இதனை ஒரு முடிய டப்பாவில் போட்டு ஸ்டோர் பண்ணி வைத்து கொள்ள வேண்டும். எப்பொழுது தேவையோ அபொழுது கொஞ்சம் எடுத்து தாளிப்பு கொஞ்சம் சேர்த்து இட்லி அல்லது தோசைக்கு பயன்படுத்தலாம். மிகவும் சுவையாக இருக்கும். இதனை ஒரு மாத காலம் அளவு கூட நாம் பயன்படுத்தலாம்.

By admin