தாமரையின் கிழங்கும், விதையும் மிகுந்த ஊட்டச்சத்து மிக்கவை. கிழங்கில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. வைட்டமின் சி, மாங்கனீஸ் ஆகியவையும் உள்ளன. தாமரை இதழ்களை நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்துக்கொண்டு சூடான நீரில் கலந்து குடித்துவர ரத்த அழுத்தம் சீராகும். தாமரை இதழ்களுடன் அதிமதுரம், நெல்லிக்காய், மருதாணி இலைகளைச் சேர்த்து அரைத்து தேங்காய் எண்ணெய்யுடன் சேர்த்து காய்ச்சி வடித்து எடுத்து தலைக்கு தேய்த்துவர இளநரை மாறும். முடி உதிர்வதும் குறையும். இந்த பதிவை பற்றிய முழு விவரமும், வீடியோ பதிவும் அதில் அடங்கி உள்ள குறிப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தாமரை இதழ்களை நீரில் வெல்லத்துடன் சேர்த்து கொதிக்க வைத்து குடித்தால் உடல் சூடு தனியும். சிறுநீரகத் தொற்றுகள் நீங்கும். நினைவாற்றல் கூடும். சருமம் பளபளக்கும். தாமரை பூவின் மகரந்தத்தை தேனில் குழைத்து உண்டு வந்தால் ஆண்மை அதிகரிக்கும். வயிற்று புண் ஆறும்.

தாமரைத் தண்டை வெயிலில் உலர்த்தி நார் தயாரித்து அதனை கொண்டு விளக்கேற்றப் பயன்படுத்தலாம். தாமரையின் விதைகள் கரிய நிறத்தில் கடினமானதாக இருக்கும். இதனை உடைத்து உள்ளே இருக்கும் பருப்பை சாப்பிட்டால் இவை உங்கள் இதயத்துக்கு வலிமை சேர்க்கும்.

வெண்தாமரை ஷர்பத் தயாரித்து சாப்பிட இரத்தமூலம், சீத பேதி, ஈரல் நோய்கள், இருமல் கட்டுப்பட, மூளைக்கு பலம் தருவதற்கு பயன்படுகிறது. கர்ப்பிணிகளுக்கு பசி எடுக்க வெண்தாமரைப் பூவை அரைத்து எலுமிச்சை அளவு சாப்பிட வேண்டும். கண்பார்வை தெளிவு பெற தேனுடன் மகரந்தபொடியை கலந்து சாப்பிட வேண்டும்.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin