இன்றைய வாழ்க்கை முறை எதுவும் ஒரு சுறுசுறுப்பான செயல்பாட்டை தருவதில்லை. மக்கள் உட்கார்ந்தே இடத்திலேயே வேலை பார்க்கும் சூழல் ஏற்பட்டு உள்ளது. மேலும் அதிகப்படியான உடல் பருமன் போன்றவை கால் மற்றும் மூட்டு வலி பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. குறிப்பாக 30-40 வயதுக்கு மேல் கால் மற்றும் மூட்டு வலி பிரச்சினைகள் என்பது அடிக்கடி ஏற்படும் விஷயமாக உள்ளது. இந்த பதிவை பற்றிய முழு விவரமும், வீடியோ பதிவும் அதில் அடங்கி உள்ள குறிப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

உடல் பருமனாக உள்ளவர்கள், பலவித உடற்கூறு பலவீனம் உள்ளவர்கள் ஆஸ்டியோ ஆர்த்ரைடிஸ் எனப்படும் மூட்டு எலும்புத் தேய்மான நோய்க்கு பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். எலும்பு வளர்ச்சியில் பற்றாக்குறை இருந்தாலோ, எலும்பு திசுக்கள் அழிந்தாலோ ஆஸ்டியோ போரோசிஸ் ஏற்படுகிறது. பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜென், ப்ரோஜெஸ்டிரோன் சுரப்பு குறைவதாலும் மூட்டுவலி, எலும்பு திசு அழிவு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று எலும்பியல் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

எனவே இந்த மாதிரி கால் மற்றும் மூட்டு வலி பிரச்சினையில் இருந்து தப்பிக்க நினைப்பவர்கள் ஆரோக்கியமான உணவுப் பழக்கத்துடன், சரியான உடற்பயிற்சிகளையும் செய்து வருவது நல்லது அதே மாதிரி மூட்டு வலி, முதுகுவலி மற்றும் கால்வலி போன்ற வருங்காலத்தில் வரும் பிரச்சினைகளை சமாளிக்க கை மற்றும் கால்களை நீட்டியும் மடக்கியும் செய்யும் நீட்டிப்பு பயிற்சிகள் சிறந்த பலனை தருகிறது. இது அந்த பகுதியில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து மூட்டு வலி மற்றும் கால் வலி வேதனையை போக்க கை கொடுக்கும் என்கிறார் பிரபல உடற்பயிற்சியாளர் அவர்கள்.

பெரும்பாலான மக்கள் பாதிக்கப்படும் விஷயம் முதுகுவலி. முதலில் இந்த முதுகு வலி எதனால் ஏற்படுகிறது என அறிய வேண்டும். நாம் தினசரி உட்காரும் நடக்கும் தோரணைகள் சரியாக இல்லாத சமயத்தில் நம் முதுகுத் தண்டுவடம் வளைவதால் இந்த மாதிரியான முதுகு வலி வர வாய்ப்பு உள்ளது. எனவே இந்த முதுகுவலியில் இருந்து நீங்க தப்பிக்க முதலில் உங்க தோரணையை சரியாக வைக்க வேண்டும். உட்காரும் போது முதுகை வளைக்காமல் நேராக உட்கார வேண்டும். மேலும் இந்த சின்ன சின்ன உடற்பயிற்சிகளை செய்து வாருங்கள் நன்மை கிடைக்கும்.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin