பெண்கள் சமையல் அறை வேலை வீட்டு வேலை என்று அவர்களுடைய அன்றாட வாழ்க்கையில் எத்தனையோ வேலைகளை செய்கிறார்கள். செய்யக்கூடிய வேலையைச் சுலபமாக மாற்றிக் கொள்ளவும், ஒரு சில விசயங்களின் மூலம் பணத்தை சேமிக்கவும், சின்ன சின்ன குறிப்புகளை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். ஸ்மார்ட்டான இல்லத்தரசிகள் இந்த குறிப்பை தெரிந்து வைத்துக் கொண்டால் இன்னும் ஸ்மார்ட்டாக குடும்பத்தை நடத்திச் செல்லலாம். இந்த பதிவை பற்றிய முழு விவரமும், வீடியோ பதிவும் அதில் அடங்கி உள்ள குறிப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இன்றைக்கு பெரும்பாலோனோர் வீடுகளில் குக்கர் சமையல்தான். எரிபொருளும் சிக்கனமாகிறது,சமையல் எளிதாக முடியும் என்பதால் கிராமங்களிலும் குக்கர்தான் உபயோகிக்கின்றனர். குக்கரை சரியாக பராமரித்தால் அதன் ஆயுள் நீடிக்கும், நமக்கும் பாதுகாப்பாக இருக்கும். ப்ரசர் குக்கர் பராமரிப்பது பற்றி நிபுணர்கள் கூறும் ஆலோசனைகளை பின்பற்றுங்களேன். சமைத்து முடித்த உடன் குக்கரின் கேஸ்கட், விசில் போன்றவைகளை தனித்தனியாக கழுவி துடைக்க வேண்டும். ப்ரஸ் கொண்டு விசில் உள்ள உணவு துணுக்குகளை நன்றாக கழுவவேண்டும்.

குக்கரின் அடிப்பகுதியில் விளக்கி கழுவ வேண்டாம் என்று தயாரிப்பாளர்கள் குறிப்பிட்டிருப்பார்கள். நாம் அதிக அளவில் ஸ்க்ரப் கொண்டு தேய்க்காமல் மென்மையான ஸ்பாஞ்ச் வைத்து குக்கரின் அடிப்பகுதியை கழுவலாம். குக்கரில் அடி பிடித்து விட்டாலோ, கரை படிந்து விட்டாலோ ஸ்க்ரப்பர் ப்ரஸ் கொண்டு கிளீன் செய்யலாம். ஒரு கப் குளிர்ந்த நீரில் சில துளிகள் சோப் நீர் விட்டு குக்கரில் ஊற்றவும். அதை லேசா சூடாக்கி பின்னர் கழுவினால் தீய்ந்து போன உணவுகள் ஈசியாக வந்து விடும்.

குக்கரின் உட்புறம் கறுப்பாக இருக்கும். எலுமிச்சைத் தோல் அல்லது வினிகர் கொஞ்சம் போட்டுப் பின்பு அதில் வைக்கக் கூடிய பாத்திரங்களை அடுக்கிவைப்பதால் அதன் உட்புறம் கறுப்பாகாமல் இருக்கும். கறுப்பாக இருந்தாலும் இந்த முறையின் மூலம் கறுப்பு நீங்கி விடும். குக்கரின் ரெகுலேட்டர், விசில் போன்றவைகளை குழாயில் காண்பித்து கழுவுவது பழைய முறை. தற்போது தனித்தனியாக கழுவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே விசில் பகுதியை தனித்தனியாக உரசி கழுவி நன்றாக உலர்ந்த துணி கொண்டு துடைத்து வைக்கலாம் நீண்ட நாட்களுக்கு வரும்.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin