சுத்தம் சோறு போடும் என்று சொல்வதுண்டு. வீட்டை சுத்தமாக வைத்துகொள்வதில் தான் நம் ஆரோக்கியமும் தொடங்குகிறது. சிலர் வீட்டை மட்டும் சுத்தமாக வைத்திருப்பார்கள். பாத்ரூம் பொறுத்தவரை வாரம் ஒரு முறை மாதம் ஒருமுறை தான் என்று திட்டமிடுவது உண்டு. ஆனால் சொல்லபோனால் தினமும் சுத்தம் செய்தாலும் கூட திருப்தி தராத இடம் என்றால் அது வீட்டிலிருக்கும் பாத்ரூம் தான். இந்த பதிவை பற்றிய முழு விவரமும், வீடியோ பதிவும் அதில் அடங்கி உள்ள குறிப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
ஒரே நாளில் பளபளப்பு மங்கி விடும் பாத்ரூமை பொறுத்தவரை நாம் அதிகம் மெனக்கெடவேண்டியதும் அந்த இடம் தான் என்கிறார்கள் சுகாதாரத்தில் அக்கறை கொள்பவர்கள். தினமும் பாத்ரூமை சுத்தம் செய்ய வேண்டும் ஏனெனில் கிருமிகளிகளின் பிறப்பிடமும் அதிகரிக்கும் இடமும் அங்குதான் என்பதால் பாத்ரூம் சுத்தம் அவசியமானது. பாத்ரூமை சுத்தம் செய்தால் மட்டும் போதாது அங்கு மூலை முடுக்குகள் வைக்கும் பொருள்கள் இருந்தாலும் அதையும் சுத்தமாக பராமரிக்க வேண்டும்.
குளியலறையை பொறுத்தவரை அன்றாடம் குப்பைகளை நீக்கிவிடுங்கள். குளியலறை நீர் போகும் சல்லடையில் தலைமுடி சென்று அடைத்துவிடும். இதனால் தண்ணீர் போகாது போகாமல் அடைத்து கொள்வதோடு கிருமிகள் தேங்கும் கூடாரமாகவும் ஆகிவிடும். இது தவிர சோப்பு துண்டுகளும் சல்லடையை அடைத்துகொள்ளும் அதனால் அவ்வபோது அதை நீக்கிவிடுங்கள். இல்லையெனில் இது மொத்தமாக சேர்ந்து குளியலறையில் ஒரு கெட்ட வாடையை உண்டாக்கிவிடும். துணி துவைத்த அழுக்கு நீர் போன்றவையும் குளியலறைக்குள் விடும்போது துணி துவைத்து முடித்ததும் ஒரு பக்கெட் நீரை ஊற்றினால் வாடை அடிக்காது.
டாய்லெட் பீங்கான் சுத்தப்படுத்துவதும் பெரிய விஷயமல்ல. வினிகரை கொண்டு பீங்கானில் ஸ்ப்ரே செய்து 8 மணி நேரம் ஊறவிடுங்கள். பிறகு சாதாரணமாக சோப்பு நீர் விட்டு பிரஷ்ஷை கொண்டு தேய்த்தாலே டாய்லெட் பளிச்சிடும். ஆசிட் பயன்படுத்தும் போது டாய்லெட் பீங்கானின் நிறம் மாறும். ஆனால் வினிகர் பயன்படுத்தி சுத்தம் செய்யும் போது டாய்லெட் பளிச்சென்று நிறம் மாறாமல் இருக்கும்.பாத்ரூம் டைல்ஸ் மற்றும் தரையையும் வினிகரை கொண்டு சுத்தம் செய்யலாம். டைல்ஸ் இருக்கும் கறைகளை நீக்குவது குறித்து வேறு கட்டுரையில் பார்க்கலாம்.
முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .