பொதுவாகவே நம் வீடுகளில் அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தும், ஒரு பொருள் தேங்காய். அந்தத் தேங்காயை துருவி எடுத்துக்கொண்டு, கொட்டாங்குச்சியை தூக்கி குப்பையில் வீசி விடுவோம். ஆனால், அந்த கொட்டாங்குச்சியில் எவ்வளவு கண்ணுக்குத்தெரியாத, உபயோகமான விஷயங்கள் அடங்கி உள்ளது என்பது நம்மில் பல பேருக்கு தெரியாது. அதிகப்படியான சத்துக்கள் நிறைந்த அந்த கொட்டாங்குச்சியை வைத்து நாம் எந்தெந்த வகையில் பயன் அடையலாம் என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த பதிவை பற்றிய முழு விவரமும், வீடியோ பதிவும் அதில் அடங்கி உள்ள குறிப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

முதலில் காலியான கொட்டாங்குச்சியை நெருப்பு மூட்டி எரித்துக் கொள்ள வேண்டும். மண்ணெண்ணெய் ஊற்றி எல்லாம் எரிக்கக் கூடாது. அப்படியே பற்ற வைத்து எரிக்க வேண்டும். முழுமையாக எரிந்து, கரியாகி தானாகவே அணைந்து, நன்றாக சூடு தனியட்டும். இப்போது எரிந்திருக்கும் அந்த கொட்டாங்குச்சி துண்டுகளை ஒன்றாக சேகரித்து, தண்ணீர் படாமல் மிக்ஸியில் அரைத்து பொடியாக்கி வைத்துக் கொள்ளுங்கள். இந்த பொடியை வைத்து தான் நாம், பலவகையான பயன்பாட்டினை தெரிந்து கொள்ளப் போகின்றோம்.


இந்தப் பொடி நம் சருமத்தை அழகாக வைத்துக் கொள்ள பயன்படும். நீங்கள் அரைத்து வைத்திருக்கும் கொட்டாங்குச்சி தூளை, சிறிதளவு எடுத்து, அதனுடன் தேன் அல்லது எலுமிச்சை பழச்சாறு அல்லது தக்காளி பழச்சாறு, கலந்து பேஸ்டாக மாற்றி உங்களது முகத்தில் ஃபேஸ் மாஸ்காக பயன்படுத்தலாம். தேவையற்ற கரும்புள்ளிகள் உடனடியாக மறையும் என்பது குறிப்பிடத்தக்கது. முகத்தில் மட்டுமல்ல உங்களுடைய உடலில் எந்த இடத்தில் கருநிறம் அதிகமாக இருக்கின்றதோ அந்த இடத்தில் இந்த பேஸ்ட்டை 20 நிமிடங்கள் வரை போட்டுவிட்டு, அதன் பின்பு கழுவி விடவேண்டும். இப்படியாக, தொடர்ந்து செய்து வந்தால் நல்ல பலன் உண்டு. எடுத்துக்காட்டாக, அக்குள் பகுதி கழுத்துப் பகுதி இந்த இடங்களில் கருநிறம் அதிகமாக இருக்கும் அல்லவா? அந்த இடங்களில் இந்த பேஸ்ட்டை, தொடர்ந்து தடவி, ஊற வைத்து 20 நிமிடங்கள் கழித்து கழுவி பாருங்கள்.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin