சருமத்தின் நிறத்தை கோதுமையுடன் ஒப்பிடும் அளவிற்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது. தானிய வகைகளில் மற்ற பயிர்களை விட கோதுமை அதிகம் வணிகம் செய்யப்படுகிறது. பஞ்சாபிகளின் முதன்மை உணவுப் பொருளாக விளங்கும் இது, ஊட்டச்சத்து நிறைந்த ஒன்று. இந்த பதிவை பற்றிய முழு விவரமும், வீடியோ பதிவும் அதில் அடங்கி உள்ள குறிப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சம்பா கோதுமை உடலின் சர்க்கரை அளவை அதிகம் குறைக்கிறது. அதில் அதிக நார்ச்சத்தும், உயிர்ச்சத்தும் நிறைந்துள்ளது. முதுகு வலியும், மூட்டு வலியும் உள்ளவர்கள் வறுத்து பொடியாக்கி அதனுடன் தேன் சேர்த்து சாப்பிடலாம். கோதுமை, உளுந்து, கஸ்தூரி மஞ்சளை பொடியாக்கி வெண்ணீர் விட்டு கலந்து மூட்டு வலி உள்ள இடங்களில் தடவலாம். கோதுமை ரவையில் புரதம், நார்ச்சத்து, வைட்டமின் பி நிறைந்துள்ளது.

அதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை கணிசமாக குறையும். கோதுமை மாவில் செய்த உணவுகளை உண்டு வந்தால், உடல் பலம் பெறும். ஆண்மை அதிகரிக்கும். அக்கிப் புண், தீப்புண் இடங்களில் மாவை நேரடியாகவோ, வெண்ணை சேர்த்தோ பூசலாம். இன்னும் ஏராளமான மருத்துவ பண்புகள் நிறைந்த கோதுமையை நாள்தோறும் உணவில் சேர்த்துக் கொள்வது சிறந்தது.

கோதுமையை சுத்தம் செய்து அதிலிருந்து தான் ரவை, கோதுமை மாவு, மைதா மாவு மூன்றையும் தயாரிக்கிறார்கள். இதில் கோதுமை மாவில் நார்ச்சத்து உள்ளது மைதா என்பது நார்ச்சத்து இல்லாத மென்மையான பொருள். இதில் ரவை என்பது கோதுமையில் உள்ள கடினமான பொருள். கோதுமையில் மட்டும் தான் ரவை என்றில்லை. அரிசி ரவை, சோள ரவைகளும் உண்டு. இந்த கட்டுரையில் கோதுமை ரவையின் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin