வாழை இலையில் தினமும் உணவு உண்டு வந்தால் உங்கள் இரத்தத்தில் உள்ள தேவையற்ற நச்சுக்கள் அனைத்தையும் நீக்கி உங்கள் இரத்தத்தினை சுத்தமாக்கும். வாழை இலையில் தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு கண்பார்வை குறைபாடுகள் ஏதும் ஏற்படாது. தினமும் வாழை இலையில் உணவு உண்டு வந்தால் நமது செரிமான மண்டலம் மிகவும் ஆரோக்கியமாக இருக்கும். மேலும் மலசிக்கல் போன்ற பிரச்சினை ஏற்படாமல் தடுக்க உதவும். இந்த பதிவை பற்றிய முழு விவரமும், வீடியோ பதிவும் அதில் அடங்கி உள்ள குறிப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மனிதர்களின் உடலில் வாய்வு பித்தம் கபம் என்கிற முக்குணங்கள் இருக்கின்றன. வாழை இலையில் தினமும் உணவு சாப்பிடுபவர்களுக்கு இந்த மூன்று குணங்களின் சமநிலைத்தன்மை சீராக காக்கப்பட்டு, உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகரித்து, உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. நம்மில் பல பேருக்கு அல்சர் மற்றும் வயிறு எரிச்சல் போன்ற பிரச்சினை உள்ளது. இது போன்ற பிரச்சினை உள்ளவர்கள் தினமும் வாழை இலையில் உணவு உண்டு வந்தால் விரைவில் நல்ல மற்றம் காண முடியும்.

வாழை இலையில் பலிபீனால்ஸ் என்னும் ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் அதிக அளவில் நிறைந்துள்ளது. இதில் நாம் உணவினை உண்டு வரும்பொழுது நமக்கு புற்று நோய் ஏற்படாமல் தடுக்கும்.

வாழை இலைகள் தீக்காயங்களில் இருக்கின்ற நச்சுத்தன்மையை அந்த இழுத்துக்கொள்ளும். சிறிய அளவில் தீக்காயங்கள் ஏற்பட்டு சிகிச்சை பெருபவர்கள் தீக்காயம் பட்ட பகுதியில் வாழை இலையை வைத்து, தினமும் கட்டி வந்தால் வெகு சீக்கிரத்தில் வந்து தீ காயங்கள் ஆறும்.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin