குடும்பம் என்பது கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் அன்பும் நம்பிக்கையும் தான் அப்படி இருக்க அந்த உறவுக்குள் இது இரண்டும் இருக்க வேண்டிய அவசியம் அனைத்து கணவன் மனைவிகளுக்கும் முக்கியம். இது இருண்டும் இல்லாமல் குடுபத்திற்குள் அதிகம் குழப்பம் வருவது பானத்தின் மூலம் தான். அப்படி வரும் இந்த மாதிரி பிரச்சனைகளுக்கு என்ன செய்ய வேண்டும். இதற்கு தீர்வாக ஆன்மீகத்தில் என்ன செய்யலாம், அதற்கான பரிகாரம் என்ன அதை எப்படி செய்ய வேண்டும் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள போகிறோம். வாங்க பாக்கலாம். இந்த பதிவை பற்றிய முழு விவரமும், வீடியோ பதிவும் அதில் அடங்கி உள்ள குறிப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கஷ்டப்பட்டு தான் ஒவ்வொருவரும் பணத்தை சம்பாதிக்கின்றனர். நம் பணத்தை நாம் பறி கொடுக்கும் பொழுது வரும் கோபமானது தான் மற்றவர்களுக்கும் வரும் என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும். இப்படி குடும்பத்தில் பணத்தால் வரும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நல்ல ஒரு எளிய பரிகாரம் உண்டு. அம்பாள் கோவில்களில் பொதுவாக பிரகாரத்தின் வெளிப்புறம் சூலாயுதம் நிச்சயமாக இருக்கும். சூலத்தை 1 முதல் 3, 5 என்று நிறைய எண்ணிக்கையில் குத்தப்பட்டு இருக்கும். அது ஒவ்வொரு கோவில்களுக்கு உட்பட்ட விதிமுறையாகும்.

அப்படி இருக்கும் சூலாயுதங்களில் நாம் எலுமிச்சைப் பழங்களைச் செருகி வைப்பது நம் வேண்டுதல்களை பலிக்கச் செய்யும் என்பது நம்பிக்கை. அந்த வகையில் தீராத பண பிரச்சனையை தீர்க்கவும், பணத்தால் வரும் சண்டை, சச்சரவுகள் அகலவும், பண ரீதியான பிரச்சினையில் வழக்கு போன்றவற்றில் மாட்டிக் கொண்டு தவிப்பவர்களும் இந்த பரிகாரம் செய்ய நல்ல ஒரு தீர்வை கொடுக்கும். மூன்று அல்லது ஒன்பது என்கிற எண்ணிக்கையில் எலுமிச்சை பழங்களை எடுத்துக் கொள்ளுங்கள்.

அதை அந்த கோவில்களுக்கு சென்று ஒரு சூலாயுதத்தில் மூன்று அல்லது மூன்று சூலாயுதத்தில் ஒன்பது என்கிற எண்ணிக்கையில் எலுமிச்சை பழங்களை பலி கொடுத்து உங்களுடைய பிரச்சனைகள் தீர மனமார வேண்டிக் கொண்டால் போதும்! பணத்தால் வந்த எத்தனையோ பிரச்சினைகளும், வந்த இடம் தெரியாமல் காணாமல் போகும். உறவுகளுக்குள் நல்ல ஒரு புரிந்துணர்வு ஏற்பட்டு ஒற்றுமை பலப்படும். பிரச்சனைக்கு உரியவர்கள் இந்த எளிய பரிகாரத்தை நம்பிக்கையுடன் செய்து அனைவரும் பயனடையலாமே!

By admin