எல்லாருக்கும் இருக்கும் பிரச்சனை பணமாக தான் இருக்கிறது. ஒவ்வொரு சனிக்கிழமையும் தவறாமல் சிலர் பூஜை செய்வது வழக்கமாக இருக்கும். பெருமாளுக்கு உகந்த நாளாக சனிக்கிழமை இருப்பதால் அன்றைய தினம் விசேஷமாக இருக்கும். இல்லத்தில் மகிழ்ச்சி குறைவாக உள்ளவர்கள், பண வரவு இருந்தும் சீரான முறையில் இல்லாமல் இருப்பவர்கள் இந்த எளிய பரிகாரத்தை பின்பற்றினால் பிரச்சினைகள் தீரும். ஸ்ரீமன் நாராயணின் மனைவியாக இருப்பவர் மஹாலக்ஷ்மி. அந்த லட்சுமி தேவி வாசம் செய்யும் இடங்களில் எல்லாம் பணவரவு சீராக இருக்கும், செல்வம் நிலையாக இருக்கும். எந்த இடத்தில் பணவரவு சீராக இல்லையோ, அந்த இடத்தில் லக்ஷ்மி கடாட்சம் இல்லை என்று தான் அர்த்தம். இந்த பதிவை பற்றிய முழு விவரமும், வீடியோ பதிவும் அதில் அடங்கி உள்ள குறிப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

லக்ஷ்மி கடாட்சம் ஒருவரது இல்லத்தில் இருக்க வேண்டும் என்றால், வீடு சுத்தமாக, மணமாக இருக்க வேண்டும். வீட்டிற்குள் நுழையும் போதே வீட்டில் நல்ல வாசம் வீச வேண்டும். சுத்தம் இல்லாத வீட்டில் லக்ஷ்மியும் இருக்க மாட்டாள். சிலருக்கு பணம் வந்தால் ஒரேடியாக வரும். இல்லை என்றால் சுத்தமாக வராது. ஒரு சீரான நிலை இல்லாமல் வருமா? வராதா? என்ற பிரச்சனையாக இருக்கும். அது போன்ற பிரச்சனைகள் நீங்க இந்த பரிகாரத்தை செய்தால் நல்ல பலன் தரும்.

உங்கள் வீட்டின் வடகிழக்கு மூலையில் நல்ல காற்றோட்டம் இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். வடகிழக்கு மூலையில் உருளி அல்லது அட்சய பாத்திரம் போன்ற வடிவத்தில் இருக்கும் பாத்திரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். இந்த பாத்திரம் எந்த உலோகத்தால் செய்யப்பட்டது என்பது இங்கு முக்கியம் அல்ல. பூஜைக்கு பயன்படுத்தும் பாத்திரமாக இருப்பது நல்லது.

இந்த பாத்திரத்தில் சுத்தமான தண்ணீரை ஊற்றிக் கொள்ளவும். அதில் 8 முதல் 10 சொட்டுக்கள் வரை பன்னீரை சேர்த்து கலக்கவும். அதில் அன்று பறிக்கப்பட்ட துளசி இலைகள் ஒரு கை பிடி அளவிற்கு சேர்த்து கொள்ளுங்கள். இதை எப்போது வேண்டுமானாலும் செய்யலாம். நல்ல நாள், நேரம் எல்லாம் ஒன்றும் கிடையாது. துளசியை பறிக்கும் போது நீங்கள் சுத்தமாக இருப்பது மட்டும் அவசியம். பின்னர் அதில் 11 ஏலக்காய்களை லேசாக இடித்து விதைகள் வந்தவுடன் இந்த பாத்திரத்தில் சேர்க்கவும்.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin