பெண்கள் சமையல் அறை வேலை வீட்டு வேலை என்று அவர்களுடைய அன்றாட வாழ்க்கையில் எத்தனையோ வேலைகளை செய்கிறார்கள். செய்யக்கூடிய வேலையைச் சுலபமாக மாற்றிக் கொள்ளவும், ஒரு சில விசயங்களின் மூலம் பணத்தை சேமிக்கவும், சின்ன சின்ன குறிப்புகளை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். ஸ்மார்ட்டான இல்லத்தரசிகள் இந்த குறிப்பை தெரிந்து வைத்துக் கொண்டால் இன்னும் ஸ்மார்ட்டாக குடும்பத்தை நடத்திச் செல்லலாம்.
எல்லாமே சின்ன சின்ன குறிப்பு தான். ஆனா தினம்தோறும் நம்முடைய வீட்டில் பயன்படும் அளவிற்கு பயனுள்ள குறிப்புகளை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். இந்த குறிப்புகளை எல்லாம் இல்லத்தரசிகள் தெரிந்து வைத்துக் கொண்டால் வேலை சுலபமாகிவிடும். நேரத்தை மிச்சம் பிடிக்கலாம். வீட்டில் இருப்பவர்களிடம் நல்ல பெயரும் வாங்கலாம். இல்லத்தரசிகளுக்கு கணவரிடம் பாராட்டை வாங்கும் போது ஒரு தனி சந்தோஷம் கிடைக்கும் அல்லவா. சரி வாங்க குறிப்பை பார்க்கலாம்.
தெரியாமல் வெள்ளைத் துணியில் சாயம் ஒட்டி விட்டது, அல்லது மற்ற ஏதோ ஒரு கறை பட்டுவிட்டது. புதிய துணியாக உள்ளது. அந்த கறையை உடனடியாக நீக்க என்ன செய்வது. கொஞ்சமாக ஹேர்பிக்கை எடுத்து கறை பட்ட இடத்தில் நன்றாக தடவி விடுங்கள்.
இரண்டு நிமிடம் கழித்து பிரஷ் போட்டு தேய்த்தால் கறை இருந்த இடம் தெரியாமல் காணாமல் போகும். கலர் துணிக்கு கூட இந்த குறிப்பை நீங்கள் பின்பற்றி பார்க்கலாம். கறை ரொம்பவும் காய்ந்து விட்டால் கறையை நீக்குவதில் சில சிரமங்கள் இருக்கும். மொத்தமாக ஐந்து நிமிடத்தில் ஹேர்பிக் உங்களுடைய துணியிலிருந்து நீங்கி இருக்க வேண்டும். அதற்குள் வேக வேகமாக வேலை செய்யுங்கள்.