நாம் அணிந்து கொண்டிருக்கும் ஆபரணங்களில் குறிப்பாக காலில் அணியும் ஆபரணம் வெள்ளிக்கொலுசு. இது கட்டாயம் அழகாகத்தான் இருக்கும். அதிலும் சூட்டு உடம்பு உடையவர்கள் அணிந்திருக்கும் வெள்ளி நகையாக இருந்தாலும் சரி, தங்க நகையாக இருந்தாலும் சரி, சீக்கிரத்தில் கருத்துப் போய் விடும். நிறையப்பேர் அழுக்குப் படிந்த கொலுசை அப்படியே காலில் அணிந்திருப்பார்கள். அந்த கொலுசை சிரமமே இல்லாமல், ஐந்தே நிமிடத்தில் எப்படி சுத்தம் செய்வது என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இதற்காக நீங்கள் காசு கொடுத்து எந்த ஒரு பொருளையும் வெளியிலிருந்து வாங்க வேண்டாம். உங்கள் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே சுலபமான முறையில் சுத்தம் செய்யலாம். இந்த பதிவை பற்றிய முழு விவரமும், வீடியோ பதிவும் அதில் அடங்கி உள்ள குறிப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


முதலில் ஒரு அகலமான பாத்திரத்தில் 2 டம்ளர் அளவு தண்ணீரை ஊற்றி, அடுப்பில் வைத்து, நன்றாக கொதிக்க விடுங்கள். முதலில் அதில், உங்கள் வீட்டில் காலியான மாத்திரை கவர் இருக்கும் அல்லவா? அதாவது அலுமினிய கவர்கள் இருந்தால் மட்டும், அதை போட வேண்டும். சில மாத்திரை கவர்களில் பிளாஸ்டிக் இருக்கும். பிளாஸ்டிக் கவர் உள்ள மாத்திரைகளைப் பயன்படுத்தக் கூடாது. அதன் பின்பாக ஒரு ஸ்பூன் அளவு ஆப்ப சோடா உப்பு போட வேண்டும். அதன்பின்பு ஒரு எலுமிச்சை பழத்தை நான்கு துண்டுகளாக வெட்டி போட்டுக்கொள்ளுங்கள். ஒரு கொதி வந்ததும் உங்களுடைய வெள்ளிக்கொலுசை அதில் போட்டு விடுங்கள். 5 லிருந்து 10 நிமிடங்கள் வரை உங்களுடைய கொலுசை, நன்றாக சுடுதண்ணீரில் கொதிக்க விடுங்கள்.

அதன் பின்பாக பழைய பல் தேய்க்கும் பிரஷ் இருந்தால், எடுத்துக்கொள்ளுங்கள். அதில் கொஞ்சமாக பல் தேய்க்கும் பேஸ்ட் தடவிக் கொள்ளுங்கள். சுடுதண்ணீரில் போட்டு இருக்கும் கொலுசை எடுத்து, பேஸ்ட் போட்டு வைத்திருக்கும் பிரஷால் லேசாகத் தேய்த்து கொடுங்கள். லேசான முறையில் முன் பக்கமும் பின் பக்கமும் தேய்த்து கொடுத்தாலே போதும். சுத்தமாக அழுக்கு போய்விட்டு, உங்களுடைய கொலுசு பலபலவென்று மாறிவிடும்.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin