பூஜை பித்தளை பாத்திரங்கள் அனைத்தும் சுத்தம் செய்வதற்கு என்றே வாரம் ஒரு நாள் சிறிது நேரத்தை ஒதுக்க வேண்டி இருக்கும். ரொம்பவும் சிரமப்பட்டு ஒவ்வொரு பொருளையும் பார்த்து பார்த்து அழுத்தி தேய்த்து சுத்தம் செய்தது போதும், இனி 10 நிமிடம் மட்டும் இருந்தால் எல்லா பூஜை பித்தளை பாத்திரங்களும் பளபளன்னு பொன் போல மின்ன வேண்டும். இதற்கு செலவு இல்லாத அற்புதமான வழி என்ன? என்கிற ரகசியத்தை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம். இந்த பதிவை பற்றிய முழு விவரமும், வீடியோ பதிவும் அதில் அடங்கி உள்ள குறிப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பூஜை பாத்திரங்கள் சுத்தம் செய்வதற்கு பொதுவாக புளியை பயன்படுத்துவது உண்டு ஆனால் இந்த சமையல் செய்யும் புளியை பயன்படுத்தி நேரடியாக இப்படி பூஜை பாத்திரங்களை சுத்தம் செய்வதை காட்டிலும் ஒரு பேஸ்ட் போல தயாரித்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த புளி பேஸ்ட் பயன்படுத்தி பூஜை பாத்திரங்களை சிரமம் இல்லாமல் எப்படி மடமட என்று தேய்த்து கழுவி சுத்தம் செய்து நேரத்தை மிச்சப்படுத்தலாம்?

முதலில் ஒரு பெரிய நெல்லிக்காய் அளவிற்கு புளியை எடுத்துக் கொள்ளுங்கள். இதை விதைகள், நார் போன்றவற்றை நீக்கி சுத்தம் செய்து சிறு துண்டுகளாக பிரித்து ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் இதனுடன் ஒரு ஸ்பூன் அளவுக்கு கோலமாவு சேர்த்துக் கொள்ளுங்கள். கோலப்பொடியில் இருக்கும் நரநரப்பு தன்மை மூலை முடுக்குகளில் எல்லாம் சென்று புளியை ஊற வைத்து சுத்தப்படுத்தும்.

இதனுடன் ஒரு ஸ்பூன் அளவுக்கு நன்கு புளித்த இட்லி மாவு அல்லது புளித்த தயிர் ஏதாவது ஒன்றை சேர்த்துக் கொள்ளுங்கள். புளித்த தயிர் மற்றும் புளித்த இட்லி மாவில் இருக்கும் நுண்ணுயிரிகள் பித்தளை பாத்திரங்களில் பளபளப்பு தன்மையை அதிகரிக்கும். நீண்ட நாட்கள் வரை நிறம் மங்காமல் பாதுகாக்கும். பின்னர் இதனுடன் முக்கியமாக சாதம் வடித்த கஞ்சி தண்ணீரை ஒரு டேபிள் ஸ்பூன் அல்லது ரெண்டு டேபிள் ஸ்பூன் அளவிற்கு சேர்த்துக் கொள்ளுங்கள்.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin